பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 - தேசிய இலக்கியம் ஏத்தலும் இடர் கெடலுமாம்” என்று பாடிச் செல்கிறார். மக்களுள்ளும் சிலர் இவ்வாறு தருவதுண்டு என்று கூறுவார். கள் உளராயின், அவர்கட்கு விடை கூறுவார்போல ஆம். பாரி வள்ளலுக்குப் பிறகு அடுத்த ஆள் இல்லையே' என்று அடுத்த பாடலில் கூறுகிறார். எது வேண்டினும் தரக் காத்து நிற்கின்றவனிடம் சென்று கேளாதது நம்முடைய குறை யன்றோ? பொன்னாக மாறிய கற்களைப் பொதிமூட்டையாகக் கட்டிக்கொண்டு திருவாரூரை அடைந்து இல்லறத்தை இனிது நடத்தினார் நம்பியாரூரர். சில நாள்கள் ஆரூரில் தங்கிய பிறகு இறைவன் உறையும் பதிகள் பலவற்றை வ ண ங் கி க் கொண் டு, திருச்சிராப்பள்ளியை அடுத்த திருவானைக்கா என்ற அரிய திருப்பதியில் விந்து சேர்ந்தார். நம்பியாரூரர் ஆனைக்காவுக்கு வருவதற்குச் சிலநாள் முன்னர் அவ்வூரில் ஓர் அற்புதம் நிகழ்ந்திருந்தது உறையூரைத் தலைநகராகக்கொண்டு சோழ வேந்தர் ஆட்சி செய்து வரலாயினர். அவருள் ஒரு சோழன் காவிரியில் நீராடச் சென்றான். நீராடும்பொழுது அவன் கழுத்தில் அணிந்திருந்த விலை மதிக்க முடியாத மணியாரம் ஆற்றில் தவறிவிட்டது. எத்துணைத் தேடியும் கிடைக்கவில்லை. சோழனுடைய வருத்தம் எல்லையில்லாமல் மிகுந்துவிட்டது. அன்று ஆனைக்காவுடைய அண்ணலார்க்குத் திருமஞ்சனம் செய்விக்க வழக்கம்போல் காவிரியிலிருந்து த ண் ணி ர் கொண்டு வந்தார்கள். திருமஞ்சனக் குடத்தில் அம் மாலை புகுந்துவிட்டது. இறைவனுக்கு நீராட்டும்பொழுது மாலையும் நீருடன் சேர்ந்து இறைவன் கழுத்தில் விழுந்துவிட்டது. இச் செய்தியைக் கேட்ட சோழன் பெருமகிழ்ச்சி அடைந் தான். நம்பியாரூரர் ஆனைக்கா சென்று பாடும் தேவாரத்தில் இவ்வரிய செய்தியை வைத்துப் பாடினார். "தாரம் ஆகிய பென்னித் தண்துறை ஆடி விழுத்து *