பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 179 நீரின் கின்றுஅடி போற்றி நின்மலா கொள்ளளென ஆங்கே ஆரம் கொண்டனம் ஆனைக் காவுடை ஆதி ய நாளும் ஈரம் உள்ளவர் காளும் எம்மையும் ஆளுடை யாரே' சுந்தரர் தேவாரம், 767) திருவானைக்காவிலிருந்து திருப்பாச்சிலாச்சிராமம் என்ற ஊரை அடைந்து ஆரூரர் பணம் வேண்டி இருந்தமையின் இறைவனைப் பாடினார். வழக்கம் போல் இறைவன் பொருள் தரவில்லை. எல்லையற்ற வருத்தம் வந்துவிட்டது ஆரூரருக்கு. நண்பன்போலப் பழகிவிட்ட காரணத்தாலும் இதுவரை வேண்டும் பொழுதெல்லாம். பொருள் தந்துவந்த கர்ணத்தாலும் இம் முறை ஆருரருக்கு வருத்தம் மிகுந்து விட்டது. எல்லையற்ற வருத்தத்தால் இவர் இல்லாவிட்டால் வேறு நமக்குக் கதியா இல்லை? என்னும் பொருள் படப் பாடத் தொடங்கிவிட்டார். அவ்வாறு பாடியதிலும் ஒரு நயம் தோன்றவே பாடினார். தம்பிரான் தோழர் ஒவ்வொரு பாட்டின் இறுதிலும் எனக்குப் பொருள் தராவிட்டால் இவர் அல்லாமல் தலைவர் இல்லையா? என்ற கருத்தில், இவர் அலாது இல்லையோ பிரானார்’ என்றே பாடிக்கொண்டு வந்தார். இல்லையோ என்ற வினாவில், வேறுவழியில்லையே இவரை விட்டால்” என்ற கருத்தும் இருத்தல் கண்டு இன்புறத்தக்கது. இவர் அலாது இல்லையோ பிரானார்: என்று முடிக்கும் முறையில் பதினொரு பாடல்களும் பாடி விட்டார். அதற்குள் இறைவன்மேல் வந்த கோபமும் மாறிவிட்டது போலும் மேலும், அவனுடைய பெருமையும், தம்முடைய சிறுமையும் நினைவுக்கு வந்துவிட்டன. கொடுத்தாலும் கொடாவிட்டாலும் தாம் ஒன்றும் செய்து கொள்ள முடியாது என்பதும் நினைவிக்கு வந்தது. தமக்குக் கொடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இறைவனுக்கு இல்லை என்பதும், அதனை மீறி அவன் தருபவுை