பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் - 181 மறந்துவிடவேண்டும். இதுவே நண்பர்களின் தலையாய இலக்கணம். இக் குறளை நன்கு கற்ற நம்பியாரூரர் இறை வனுக்கே திருக்குறளை நினைவூட்டுகிறார். அவன் அனைத் திற்கும் மேலான இறைவனாகவே இருப்பினும் வேண்டு .ெ ம ன் ேற நம்பியாரூரரை நண்பனாக்கிக்கொண்டான் அல்லனோ? எப்பொழுது அவரை நண்பனாகக் கொண் டானோ அப்பொழுதே அவருடைய பிழைகளை மன்னிக்க வேண்டிய கடப்பாடும் இறைவனுக்கு உண்டல்லவா? இதோ குறள் பேசுகிறது. "பேதமை ஒன்றோ பெருங்கிழமை என்று உணர்க கோதக்க கட்டார் செயின்’ (குறள், 805) நண்பன் ஒருவன் தவறு செய்துவிட்டால், ஒன்று, அறியாமையால் செய்துவிட்டான் என்றாவது அல்லது அதிக உரிமைபற்றிச் செய்துவிட்டான் என்றாவதுதான் கொள்ளவேண்டும். இங்கு ஆரூரர் கோபத்துடன் பேசியதை அறியாமையால் செய்துவிட்டார் என்று கூற முறை இல்லை. ஏனெனில், நன்கு கற்றறிந்த பெரியவரான அவர் இறைவ னுடைய பெருமையை அறியாமல் இவ்வாறு கூறினார் என்பது முறையன்று. எனவே, எஞ்சி இருப்பது ஒரு எாரணந்தானே? அதிக உரிமையால் கூறினார் என்றுதான் மதித்து மன்னித்துவிடவேண்டும். அதைத்தான் ஆரூரர் பன்னிரண்டாம் பாடலின் மூன்றாம் அடியில் குறிக்கிறார். பன்னாள் வாயினாற் கூறி, மனத்தினால் நினைவர்ன் வளவயல் ஆரூரன் என்று தம்மைக் கூறிக்கொள்ளும்போது பழங்காலத்தொட்டே தமக்கும் இறைவனுக்கும் உள்ள நட்பைக் குறிப்பிடுகிறார். நான்காம் அடி இவ்வளவு நாள் பழகிய நண்பனாகிய நான் பேசின பேச்சை அது தவறாகவே இருந்தாலும் என்னுடைய நட்பின் பழைமை யைக் கருதிப் பொறுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு நண்பனாகிய நான் பேசின குற்றத்தைப் பொறுக்கவில்லை