பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 தேசிய இலக்கியும் உலகத்திலே வேறு எங்கும் காண முடியாத முறையிலே இந்த நாட்டிலே சில வரலாறுகள் உண்டு. ஆண்டவனுக்கு அர்ச்சனை செய்வதைக் கேள்விப் படு கின்றோம். பால் பழம் முதலியவற்றினாலே அபிஷேகம் செய்வதைக் கேள்விப்படுகின்றோம் ஆண்டவனைக் கல்லால் அடித்தும் வழிபடலாம் என்று எங்கேயாவது கேள்விப் பட்டிருக்கின்றோமா? ஆனால், இந்த நாட்டிலே அப்படியும் ஒரு வரலாறு உண்டு. சாக்கிய நாயனார் என்ற ஒர் அன்பர் ஆண்டனைத் தினந்தோறும் கல்லால் அடித்தார். கல்லால், அருச்சனை செய்து மோட்சத்தையும் பெற்றார். இதைவிட வியப்பு வேறென்ன இருக்க முடியும்? மனித மனத் தத்து வத்தை எவ்வளவு அடிப்படையாக ஆராய்ந்து அதன் பயனாகத் தமிழர்கள் இந்தப் பேருண்மையைக் கண்டார்கள் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும், ஆண்டவனைக் கல்லால் அடிப்பதைவிடத் தவறான காரியம் வேறு இருக்க முடியுமா? ஆனால், அதுவும் வீடுபேற்றிற்குக் காரணமாயிற்று என்றால் உண்மை என்ன? ஒருவன் செய்கின்ற செயலை இந்த நாட்டவர்கள் பெரிதாகக் கருதியதில்லை, செயலின் பின்னே இருக்கின்ற மனோ நிலை என்ன என்பதைத்தான், கேட்டார்கள். ஆண்டவனைக் கல்லாலும் அடிக்கலாம்; மலராலும் அடிக்கலாம். மலரால் அடிப்பது உயர்ந்தது என்று கருதுகிறோம் கல்லால் அடிப்பதைத் தவறானது என்று கருது கின்றோம். ஏன்? உலகம் முழுவதும் அப்படித்தான் கருதும், அதில் தவறொன்றுமில்லை உலகத்தார். பலரும் ஏற்றுக் கொள்ளும் ஒரு கருத்தை இத் தமிழ் நாட்டார் ஏற்றுக்கொள்ள வில்லை. அவ்வாறு ஏற்றுக் கொள்ளாததற்குத் தக்ககாரணமும் உண்டு. கல்லால் அடித்தவர் போற்றப்பட வேண்டிய சந்தர்ப்பமும் இருக்கலாம் அல்லவா? இக் கருத்தைத் திருநாவுக்கரசர் அழகாகப் பாடுகிறார்.