பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அ. ச. ஞானசம்பந்தன்

187


“கரும்பு பிடித்தவர் காயப்பட்டார் அங்கு ஓர் கோடலியால்
இரும்பு பிடித்தவர் இன்புறப் பட்டார்”

(திருநாவுக்கரசர் தேவாரம். 990)

ஒருவன் கரும்பாகிய வில்லை வளைத்து மலராகிய அம்புகளை எய்தான் இறைவன் மேல். இது குற்றமா? மலர் மாலையை நம்முடைய கழுத்தில் யாராவது அணிவதைத் தவறு என்போமா? அப்படி மலரால் எய்யப்பட்டவர் என்ன செய்தார்? தம்முடைய கண்ணைத் திறந்து தம்மேல் மலரை எறிந்தவரை எரித்தே விட்டார். மற்றொருவர் கல்லை எடுத்து ஆண்டவன் மேல் தினந்தோறும் அடித்துக் கொண்டே இருந்தார். இனி ஒருவன். சரியான இரும்புக் கோடாரியை எடுத்துத் தம்முடைய தந்தையின் காலையே வெட்டி விட்டார்.

கல்லால் அடித்தவருக்கும், இரும்புக் கோடாரியால் பெற்ற தந்தையின் காலை வெட்டியவருக்கும் என்ன வெகு மதி கிடைத்தது; மோட்சம். உலகத்தில் வேறு எங்கும். காண முடியாத வரலாறுகள் இவை. இந்த இரண்டு வரலாறுகளும் தாம் இந்த நாட்டின் ஒப்பற்ற அறிவுத் திறமையை எடுத்துக் காட்டுகின்றன கல்லால் அடிப்பது பொருளன்று. மலர் மாலை எடுத்து அணிவதும் பொருளன்று. இவை இரண்டு செயல் களின் பின்னே இருக்கின்ற மனோநிலையைப் பார் என்று சொன்னார்கள். கல்லால் அடித்தவன் என்ன மனநிலையில் அடித்தான்? அன்பின் அடிப்படையில் அடித்தான். மன்மதன் மலரைக் கொண்டு இறைவன் மேல் தொடுத்தானே, என்ன எண்ணத்தினால் தொடுத்தான்; அன்பு இல்லை அவனுக்கு! ஆண்டவனுடைய தவத்தைக் கலைக்க வேண்டுமென்பது தான் அவனுடைய எண்ணம்.

செய்யப்பட்ட செயலைமட்டும் வைத்துக்கொண்டு முடிவுக்கு வருவதானால் மன்மதன் செயலைப் போற்றவும், கல்லால் அடித்த சாக்கியரைத் தூற்றவும், தந்தையின்காலை வெட்டிய சண்டேசுவரரைப் பழிக்கவும் நேரிடும். இவைபற்றி முடிவுக்கு வருமுன் உலகியலிலும் இத்தகைய ஒரு செயலைக்