பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 தேசீய இலக்கியம் பழைய விவிலிய நூலில் கூறப்பெற்ற கதை ஒன்று இதனை வலியுறுத்துகின்றது. "விதைகள் விழுத்தன; குருவிகள் அவற்றைக் கொத்திக்கொண்டு போல்விட்டன. களர் நிலத்திலே சில விதைகள் விழுந்தன; அவை முளைக்கவே யில்லை. நல்ல பக்குவமுடைய நிலத்தில் சில விதைகள் விழுந்தன. அவை ஒன்று நூறாகப் பல்கிப் பலன் அளித்தன." அதைப்போல ஆண்டவன் தந்த அன்பாகிய விதையைப் பெருக்க வேண்டும், . பிறக்கும் பொழுதே நாம் கொண்டுவருகின்ற ஒரு சொத்து அது. தாயினுடைய கருவிலே தோன்றுவது முதல் கொண்டு நம்மிடத்திலே ஊறி உண்டாகின்ற ஒரு பொருள் அது. அந்த அன்பு இறுதிவரையிலே இருக்கின்றதைக் காண்கின்றோம். எல்லோருக்கும் சமமாகக் கிடைக்கின்ற இந்தச் சொத்தை ஒரு சிலர் பெருக்குகின்றார்கள். ஒரு சிலர் எந்த அளவில் பெற்றார்களோ அந்த அளவிலேயே வைத்து விடுகிறார்கள். அனைவருக்கும் பொதுவாகக் கிடைக்கின்ற இந்த அன்பு ஒரு சிலரிடத்திலே பட்டு நல்ல பக்குவமான நிலத் திலே விழுந்த விதையைப்போலப் பெருகிப் பயன் அளிக் கின்றது.புத்ததேவர், ஏசுநாதர் நம்மாழ்வார். ஞானசம்பந்தர், இராமகிருஷ்னர் போன்ற பெருமக்களிடத்தில் ஆண்டவன் கொடுத்த அன்பாகிய இந்த விதை வளர்ந்து பெரிய மரமாகப் பல்கிப் பலன் அளித்ததைக் காண்கிறோம். நம் போன்ற ஒரு சிலரிடத்திலே எந்த அளவுக்கு அது கிடைத்ததோ அந்த அளவிலேயே நின்று விட்டது. மேலே கூறிய இப் பெரியோர் களிடத்தில் கிடைத்த அன்பு எவ்வாறு முதிரத் தொடங்குகிறது என்பதைத்தான் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்கவேண்டும். "நான்தனக்கு அன்பு:இன்மை நானும்தானும் அறிவோம் தான்என்னை ஆட்கொண்டது எல்லாரும் தாமறிவார் ' (திருவாசகம் - திருககோத்தும்பி, 13)