பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 தேசீய இலக்கியம் எவ்வளவுதான் அவன் கொடுத்த அன்பையெல்லாம் பொரித்துத் தின்றுவிட்டாலும், அவன் விடமாட்டேன் என்கிறான். மறுபடியும் மறுபடியும். நமக்குப் பிறவியைக் கொடுத்து எப்படியாவது முன்னேறுகிறோமா என்று கவலைப் படுகிறான். அப்படிக் கவலைப்பட்டு, எப்படியாவது நம்மைத் தன்னிடத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று அவன் கவலைப்படுகின்றான். நம் போன்றவர்கட்கு அந்தக் கவலை இல்லை என்பது நன்றாகத் தெரிந்த விஷயம். ஆனால், மாணிக்கவாசகர் போன்ற பெரியோர்களும் அன்பில்லை என்றே சொல்கிறார்களே என்றால், நம்மிடம் உள்ளவற்றைத் தம்மிடம் உள்ளவைபோலப் பேசுதல் பெரியார் இலக்கணம். நம்முடைய குறைகளை நேரிடையாக எடுத்துக் காட்ட மாட்டார்கள் அவர்கள். தங்கள் இடத்தில் அந்தக் குறை இருப்பது போலவும், அதை உலகத்தார்க்கு எடுத்துச் சொல்லுவது போலவும் சொல்லுவார்கள். அவர்கள் அப்படிச் சொல்வதன் அடிப்படை என்ன? நம்முடைய உண்மை நிலையைத்தான் அவர்கள் எடுத்து விளக்குகிறார்கள். நம் குற்றத்தை நேரிடையாக எடுத்துக்காட்டினால், திருத்திக் கொள்ளும் மனநிலையைவிட அவர்கள் மேல் சினமே உண்டாகும். ஆகவேதான், நம்மாட்டுக் கருணையுடைய பெரியோர்கள் பிழைகளைத் தம்மேல் ஏற்றிக்கொண்டு வருந்துகிறார்க்ள். - . ஒருவாறு இதனை உணர்ந்து வாழத் தொடங்குபவர்கள் இழைக்கும் இரண்டாவது தவறும் ஒன்றுண்டு, தொடக் கத்தில்ே இந்தச் சூரத்தனத்தோடு எதையும் செய்வார்கள். கொஞ்ச காலம் ஆனபிறகு கொஞ்சம் கொஞ்சமாகக் கொள்கையை மறந்துவிடுவர். இவ்வாறு நேராமல் அன்பை வளர்ப்பதற்கு அடிப்படையாகத்தான், இந்தக் கிரியைகளை யெல்லாம ஏற்படுத்தினார்கள். சிவராத்திரியே ஏறத்தாழ அந்தக் கருத்தில் ஏற்பட்டதுதான். அதன்மூலமாக ஆண்டவனை நினைத்து வழிபடவேண்டுமென்பதற்காக