பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் - 195 காலஞ் செல்லச் செல்ல ஏன்ன ஆயிற்று? இந்தக் கிரியைகள் தங்கிவிட்டன. இவற்றின் பின்னே நின்ற அடிப்படைகள் மறைந்துவிட்டன. ஏதோ ஒரு காரணத்தைப்பற்றி ஒரு பொருள் ஒரு காலத்தில் ஏற்படுகிறது. காரணம் மறைந்து பல நாட்கள் ஆகிவிட்ட பிறகும் பொருள் நின்று கொண்டே இருக்கும். பலர் எதற்காக இப் பொருள் இங்கே இருக்கிறது என்று டக் கேட்பர். ஏதோ பெரியவர்கள் காலத்திலே இருந்தது: இன்றும் இருந்துக்கொண்டேயிருக்கின்றது என்று விடைவரும். இப்படி நம்மையறியாகல் எந்த அடிப்படை யிலே ஒன்றை ஏற்படுத்தினோமோ அந்த அடிப்படையை மறந்துவிட்டுப் பொருளைமட்டும் வைத்துக் கொண்டிருப்போம். ஒரு நண்பன் வைர மோதிரத்தை அழகான பெட்டியில் வைத்துப் பரிசாக அனுப்பினான். என்னைப்போல ஒருவனுக்கு அந்தப் பரிசு அனுப்பப் பெற்றது. பரிசைப் பெற்றவன் மோதிரத்தைத் தூகிகி வெளியிலே வைத்து. விட்டான். பெட்டி அழகாக இருந்தது என்று அதைச் சாக்கிரதையாக வைத்துக்கொண்டான். அது போல, அன்பாகிய ஒரு மோதிரத்தை உடம்பாகிய பெட்டியில் வைத்து ஆண்டவன் அனுப்பினான். நாம் என்ன செய்கிறோம்? அந்த அன்பாகிய மோதிரத்தை விட்டு விட்டோம். பெட்டி அழகாக இருக்கிறதென்று அதற்குச் செய்கின்ற உபசாரம், உள்ளே இருக்கின்ற பொருளையே மறைத்துவிடுகின்றது. * . இதேபோலக் கிரியைகளையே பெரிதாக நினைத்துக் கொண்டு சிவராத்திரி அன்று தவறாமல் மூன்றுவேளை பூசை செய்கின்ற பெருமக்கள் உண்டு. அன்பு கலவாத அந்தப் பூசையை நினைத்துப் பார்க்கின்றார் திருநாவுக்கரசர். அனுபவம் முதிர்ந்த அக் கிழவர் பல பேர்களுடைய பூசையைப் பார்த்திருப்பார்போலும் அந்தப் பூசையிலே இவருக்கு ஒரு சந்தேகம் வந்துவிட்டது. பூசை எதற்காகச் செய்கிறான்? ஆண்டவனிடத்திலே தன்னை வழிபடுத்து