பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 தேசிய இலக்கியம் தொடங்கிற்று. களப்பிரர் ஆட்சியால் துன்புற்ற தமிழர் ஒற்றுமை பெற வேறு வழி இன்மையால் சமயத்தை அடிப்படையாகக் கொண்டு ஒற்றுமை பெற்றார்கள்போலும்! களப்பிரர்மேல் தமிழர்கொண்ட அரசியல் வெறுப்புப் பல வடிவங்களில் வெளிப்பட்டது. வேற்றுநாட்டுச் சரக்கு எதுவாயினும் அதன்மேல் வெறுப்புக்கொள்ளுமாறு செய்தது. கூட்டம் கூட்டமாகச் சமய வழிபாடு செய்தலும், தம் தம் சமயத்தைப் பரப்ப முயல்வதும் வழக்கத்துக்கு வந்தன. ஏழாம் நூற்றாண்டிற்கு முன்பும் பல அடியார்கள் தோன்றி இருப்பினும், கூட்டஞ் சேர்த்து, சமயத்தைப் பரப்ப முன்வந்ததாகத் தெரியவில்லை. சைனமும் பெளத்தமும் தமிழ் நாட்டில் பெற்ற செல்வாக்குக்கு, இவ்விதம் கூட்டமாகச் சேர்ந்து பிரசாரம் செய்தலும் ஒரு காரணமென்று சொல்லலாம். தமிழ் நாட்டில் என்றும் உள்ளனவாய சைவமும் வைணவமும் புதிதாகப் புகுந்த இம் முறையை மேற்கொள்ளத் தொடங்கின. பெளத்தத்தின் பெருமை கூற மணிமேகலை தோன்றியது போல பத்தாம் நூற்றாண்டில் சைனத்தின் பெருமைகூறச் சிந்தாமணி தோன்றியது. தமிழ்நாட்டுப் பெண் ஒருத்தியைக் காப்பியத் தலைவியாக மணிமேகலை எடுத்துக்கொண்டது போல் செய்யாமல், வேற்று மொழியில் கூறப்பெற்ற வரலாற்றைச் சிந்தாமணி கருப்பொருளாக எ டு த் து க் கொண்டது. கவிதை முறையிலும், மணிமேகலை சங்க காலத்தில் பெரு வழக்கினதாக இருந்த ஆசிரியப்பாவை மேற்கொள்ள், சிந்தாமணி அதிலும் புதுவழி கண்டது. விருத்தப்பா அதுவரை பெருவழக்காய்த் தமிழ்நாட்டில் நிலவவில்லை. முதன்முதல் ஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் பாடல்களில்தான் விருத்தப்பாக்கள் மிகுதியாகத் தோன்று கின்றன. எனவே, அவற்றை அடுத்துத் தோன்றிய சிந்தாமணி அவ் விருத்தப்பாக்களைக் கொண்டே ஒரு பெருங் காப்பியமாக அமைந்தது. இந் நிலையில் தமிழ்நாட்டில் தோன்றிய சமயப் புரட்சி யின் தலைவர்களாக ஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் நின்றனர். சைவ சமயத்தைப் பரப்பத் தங்கள் வாழ்க்கை