பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 தேசீய இலக்கியம் கார சக்திதான் அதே போல அன்பும் வேண்டும்: அறிவும் வேண்டும். ஆனால், எது மிகுதியாக வேண்டும்? அன்புதான் மிகுதியாக வேண்டும் என்று கண்டு பிடித்தார்கள். மிகப் பழைய காலத்திலேயே நம்முடைய பெரியவர்கள் கண்டு பிடித்த பேருண்மை இது, எப்படித் தெரிகிறது? மிக எளிதாகத் தெரிந்து கொள்ளலாம். இப்பொழுது நம்முடைய வாழ்க்கை முறை நடந்து கொண்டு போவதைக் காண்போமேனால், அறிவு உலகமாகிய விஞ்ஞான உலகம் நமக்கு எத்தனையோ நன்மைகளை வழங்கியுள்ளது. நோய் என்று போனால் சகஜமாக இன்று மருத்துவர்கள் பயன்படுத்துகின்ற ஒன்று பென்சிலின், இது போல எத்தனையோ மருந்துகள். பென்சிலின் ஊசி போட்டுக் கொள்கிறவர்கள் யாராவது இதைக் கண்டு பிடித்தவர்யாரென்று. நினைத்தது உண்டா இல்லை இங்கே பேசுகின்றதை உலகம் முழுவதும் பரப்புகின்றதே வானொலி, இதைக் கேட்கின்றவர் கள் யாராவது இதைக் கண்டு பிடித்தவர்கள் யார் என்று நினைத்துப் பார்த்ததுண்டா? வேகமாகக் பறந்து செல் கிறார்களே விமானத்தில், அப்படிப் பறக்கும்போது விமானத் தைக் கண்டு பிடித்தவர்கள் யார் என்று நினைக்கிறார்களா? இல்லை. விமானமும், ஒலிபரப்பியும், இந்தப் பென்சிலின் மருந்தும் அறிவின் பயனாக உலகத்தில் தோன்றியவை பிற மக்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுகிறார்கள். வேண்டா என்று யாரும் சொல்வதே கிடையாது. ஆனால், இதைக் கண்டு பிடித்தவர் யார் அவருக்கு நன்றி பாராட்ட வேண்டும் என்று ஒரு வினாடி கூட நினைத்தது கிடையாது. அறிவினாலே செய்யப்பட்ட எவ்வளவு சிறந்த பொருள் இருந்தாலும், உலகம் அதனைப் பயன்படுத்திக் கொண்டதே தவிர அதற்கப்பால் சென்று அதற்கு நன்றி பாராட்டவே யில்லை. . - - ஆனால், இன்னும் சிலர் இத்தகைய உபகாரங்கட்கு நேர்மாறானவற்றையே செய்தார்கள். மாதத்தில் முப்பதுநாள் என்றால் 85 நாள் பட்டினி கிட என்று சொன்னார்கள்,