பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 தேசிய இலக்கியம் அறிவின் பயனாகக் கண்ட பேருண்மைகள்ை எல்லாம் உலகத்தார் விடாமல் பயன்படுத்திக் கொண்டார்களே தவிர, அதற்கப்பால் சென்று அவற்றைக் கண்டுபிடித்து நமக்களித் தவர்கட்கு நன்றி பர்ராட்டவில்லை. இதன் எதிராகப் பெரியோர்கள் கூறிய வழிகளைக் கடைப்பிடிக்க நம்மால் இயலவில்லை என்றாலும், கடைப்பிடிக்க முயன்று ஒரளவு தோற்றுவிட்டாலும் அவர்கள் செய்த உபதேசங்களையும் அவர்களையும் மறப்பதே கிடையாது இந்தப் பகுப்பில் வந்தவர்களெல்லாம் அன்பின் வழியினாலே உண்மையைக் கண்டவர்கள். அறிவின் வழியிலே சென்று மெய்ம்மை கண்டவர்களை உலகம் மறந்துவிட்டாலும், அன்பின் வழியிலே சென்று உண்மையைக் கண்டவர்களை மறக்கவே இல்லை. ஏன்? மனித இனத்துக்கு உண்மையான நன்மையை நிலைத்த நன்மையைச் செய்தது எது என்று ஆராய்ந்து பார்த்தார்கள் நம்முடைய பெரியவர்கள். மருந்து இல்லாவிடின் இறப்பு உறுதி என்றாலும் கவலையில்லை என்றார்கள். இந்த மருந்து நேற்றுதான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால்.அதற்கு முதல் நாள் மனிதன் வாழ்ந்தானா, வாழவில்லையா? 100 வருடங்களுக்கு முன் வாழ்ந்தானா, வாழவில்லை? வாழ்ந்து கொண்டுதானே இருந்தான். இனி, நாளையும் வாழத்தான் போகிறான். மணிக்கு 1500 மைல் வேகத்தில் இன்று செல் கிறோம். போக்குவரத்துச் சாதனமே இல்லாத காலத்தில் மனிதன் வாழ்ந்தானா வாழவில்லையா? வாழ்ந்து கொண்டு தான் இருந்தான். இன்னும் சொல்லப் போனால் ஒரளவு அமைதியோடு கூட வாழ்ந்தான். இவ்வளவு வேகமாகப் போகின்ற காலத்தில், இன்றைய மனிதன் வேகமாகப் போகின்ற சக்தியைப் பெற்றானே தவிர, அமைதியை இழந்து விட்டான். ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தார்கள் நம்முடைய பெரியவர்கள். எது தேவை? அறிவின் துணைக்கொண்டு கருவி செய்து இவ்வளவு வேகமாகப்போவது தேவையா? என்று. இரண்டாலும் தவறில்லை. சந்தர்ப்பம் வந்தால் அறிவின் பயனாகிய கருவிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்;