பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 7 முழுவதையும் செலவிட்டனர். அந்தத் கொண்டிற்குத் துணையாகத் தங்கள் நெறியான வாழ்க்கை, அருஞ் செயல்கள் என்பவற்றோடு கவிதையையும் ஒர் உறுகருவி யாக அவர்கள் பயன்படுத்தினர். தேவாரப் பதிகங்கள் இறைவன் புகழ்பாடும் பக்திப் பாடல்களாக இருப்பதோடு சிறந்த கவிதைகளாகவும் இலங்குவதைக் காணலாம் ஆன்ம ஒருமைப்பாட்டை உண்டாக்கும் சமயப் பிரசாரத்திற்கு, ஆன்ம ஒருமைப்பாட்டை வளர்க்கும் கவிதை சிறந்த துணை யாவதை அனைவரும் அறிவார்கள். ஆகவே, அவர்கள் காலத்தில் தொடங்கிய இச் சமயப் பரப்பு நோக்கம் சைவ சமயத்தைப் பொறுத்தவரையில் பன்னிரண்டாம் நூற்றாண் டில், திருந்தொண்டர் புராணம் இயற்றிய சேக்கிழாருடன் முடிவடைந்தது என்று கூறலாம். - சங்கப் பாடல்களும் சேக்கிழார் பாடல்களும் பெரிதும் வேறுபாடு உடையன. சங்கப் பாடல்களில் மனிதப் பண்பே பெரிதும் பேசப்பெற்றது. இதனை அடுத்து இயற்கை, அவ்வியற்கை மனத்தில் எழுப்பும் காட்சிகள் இவையே பெரிதும் இடம் பெற்றன. மேலும், மக்களைப் பற்றிய கவிதை களும், தனிப்பட்ட ஒருவர் வாழ்வில் நடைபெற்ற சிறு செயல் களையோ, பெருஞ்செயல்களையோ குறிப்பனவாய் இருந்தன. பொதுவாக மக்கள் வாழ்க்கையில் காணப்பெறும் குறிக்கோள் சங்கப் பாடல்களில் பேசப்பெற்றது. அக்கால மக்கள் மனம் இவ்வுலக வாழ்க்கையிலேயே பெரிதும் ஈடுபட்டிருந்தது. இகவாழ்வைச் செம்மை செய்து, மகிழ்ச்சியும் அமைதியும் அடையும் வழிகளே சங்கப் பாடல்களில் பெரிதும் இடம் Glujsp&r. Funtu 3, §§gsui' (Religious philosophy: List-i or அக் காலத்தில் இன்மைக்குச் சங்கப் பாடல்கள் ஒரு பெரிய எடுத்துக்காட்டாகும். நீண்டகாலமாகத் தமிழ்நாட்டில் இலக்கியம் இம் முறையிலேயே வளர்ந்துவிட்டமையின் ஒரு புரட்சி தேவையாக இருந்தது. சங்கப் பாடல்களில் காணப்பெறாத சமயத் தத்துவம் பாடல்களில், போட்டி யிட்டுக்கொண்டு ஏழாம் நூற்றாண்டிலிருந்து பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் குவிந்தன. .