பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

309 - ஞானசம்பந்தன் . ه. قه என்று நம்பி, அந்த அன்பு வழியிலேயே போனவர்களுக்குக் கிடைத்த பரிசில் யாது? நைதல்; அதாவது பட்டுப் பட்டுத் துன்பம் தாங்காது வருந்துதல்தான் கிடைக்கின்ற பயன். அட, கிழவனாருக்குத்தான் இந்தச் சந்தேகம் வந்தது. இளைஞனாக இருந்திருந்தால் இந்தக் கேள்வி கேட்டிருக்க மாட்டார் என்று நினைத்தால், மிகவும் இளங் குழந்தையாகிய நம்மாழ்வாருக்கும் இந்தக் காட்சிப் பொறுக்க முடியவில்லை. இது என்ன உலகியற்கை என்று கேட்கின்றார் அவர். உன்னையே சரண் என்று வந்து அடைந்தவர்கள் இருக்கின் றார்களே, அவர்கள் அம்மியில் வைத்து அரைப்பது போன்ற அந்தப் பொறுக்கமுடியாத துன்பத்தைப் பெறுகிறார்கள். இது என்ன உலகியற்கை? என்ற பொருளில் 'நண்ணாதார் முறுவலிப்ப நல்லுற்றார் கரைந்து ஏங்க என் ஆறாத் துயர் விளைக்கும் இவை என்ன உலகியற்கை? என்று பாடுகிறார். அப்படியானால் அன்பு வழியிலேயே சந்தேகம் வந்து விட்டதா அவர்கள் இருவர்க்கும்; நம் காலத்தில் வாழ்ந்த கவியரசர் பாரதியும் கண்ணன் பாடலில் "கல்வழி கடப்பவரைச் சற்று மனம் கையும்வரை சோதனைசெய் கடத்தையுண்டு” என்று பாடுகிறார். அன்பு வழியிலே சென்றால் இதுதான் பயன் என்றால், அப்பப்பா வேண்டா அந்த அன்பு வழி என்றுகூடத் தோன்றும் சில சமயங்களிலே. அப்படி அச்சம் வரும் பொழுதுதான் பெரியவர்களுடைய வாழ்க்கை நமக்குப் பாடமாகிறது. நாம் படுகின்ற துன்பமெல்லாம் ஒரு துன்பமா? சிலுவையிலே வைத்து ஆணி அடிக்கின்ற துன்பத்தோடு ஒப்பு நோக்கினால், நமக்கு வந்த வயிற்றுவலி பிரமாதம் ஒன்றுமில்லை. தன்னுடைய பிள்ளையையே தான் அறுத்துக் கறி சமைத்துப் பேர்டுகின்ற துன்பத்தை நோக்கினால், நம் வீட்டிலேயே 80 வயது இருந்து இறந்து போனவர்களைப் பற்றிப் படும் துன்பம் பெரிதன்று, சுகைய பாடங்களை தேசீ.-14