பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£10 தேசிய இலக்கியம் அந்தப் பெரியவர்களுடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளுகிறோம். உண்மையாக ஆண்டவன் அருள் உள்ளம் படைத்தவன் என்றால், ஏன் இப்படித் துன்பத்தைப் படைக்கவேண்டும்? அதையும் நம்மவர்கள் ஆய்ந்து அதன் காரணத்தையும் கண்டுபிடித்தார்கள். அதுதான் அன்பி னுடைய அடிப்படை என்றார்கள், - "அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார், மறத்திற்கும் அஃதே துணை-இந்தக் குறளுக்குப் பலர் பலவாறு பொருள் சொல்லுவார்கள். எனினும், இப்படியும் ஒரு பொருள் செய்யலாம்: மறத்திற்கும் அஃதே துணை என்றாரே, அதைத்தான் நம்மவர்கள் கண்ட பேருண்மை என்று சொல்ல வேண்டும். மருத்துவர் அறுக்கிறார். சின்னக் கத்தியில் கீறிவிட்டால்கூடப் பெருத்த குற்றமாகக் கருதுகின்ற இந்த நாட்டிலே பெரிய கத்தியினாலே வயிற்றைக் கிழித்துவிடு கின்றாரே, அவருக்கு எத்துணை மதிப்புத் தருகின்றோம். ஆயிரக்கணக்கான ரூபாய்களைக் கொட்டிக் கொடுத்து. வீழ்ந்து வணங்கி, உங்களால் எனக்கு உயிர் வந்தது என்று சொல்லுகிறோமே. அதனுடைய அடிப்படை என்ன? அறுக்கின்றதாகிய செயல் பெரிது என்றால் அவருக்குப் பெரிய தண்டனையல்லவா கொடுக்கவேண்டும்? இதைத்தான் தொடக்கத்தில் கண்டோம். செய்கின்ற செயலை வைத்து நம்மவர்கள் எதனையும் பெரிதாகக் கருதவில்லை. செயலின் பின்னே இருக்கின்ற மனோநிலை என்ன என்று கண்டார்கள். மருத்துவர் அறுக்கும்பொழுது என்ன க ரு த் தோ டு அறுக்கின்றார்? நமமை வாழவைக்க வேண்டுமென்ற கருத்தோடுதான். அந்த அடிப்படையைத்தான் இங்கே காணுகின்றோம். - ஆண்டவன் பல சமயங்களிலே துன்பத்தைத் தருகிறான். நினைந்து உருகும் அடியவரை நைய வைக்கின்றான். எண்ணற்ற துயரத்தைத் தருகின்றான். ஏன்? நம்மை வாழ