பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 தேசிய இலக்கியம் சுட்டான். பொறுக்கக்கூடிய துன்பமா? ஆனால், அவன் மாட்டு அன்பு குறையவில்லையே. அதுபோல, ஆண்ட் வனே, நீ எனக்குத் தருகின்ற துன்பங்கள் எல்லாம் எதனால் வந்தவை? அருளினால் வந்தவை. என்னை வாழவைக்க வேண்டுமென்று நீ கொண்டிருக்கிற அந்த அருள் காரணமாக' எனக்கு இத் துன்பத்தைத் தந்தாய்’ என்று ஆழ்வார் பேசும்பொழுது பெரிய பேருண்மையை உணர்ந்துகொள் கிறோம் நாம், உலகத்திலே இந்த ஒன்றைத் தவிர வேறு வழியே இல்லை. பல சமயங்களிலே துன்பம்போலக் காட்சி அளித்தாலும், ஆண்டவன் அருளே வடிவானவனாகலின் எனக்கு இத்தகைய துன்பத்தைத் தருகிறான் என்று நம்மையு மறியாமல் ஏற்றுக்கொள்கிறோம். என்னை வாழவைப்பதற். காக அவன் கைக்கொள்கின்ற பல்வேறு கருவிகளில் இந்தத் துன்பமும் ஒன்று என்று நினைக்கும்பொழுது மனம் அமைதி யடைகிறது. பெரியோர்களுடைய வாழ்க்கையைப் பார்க்கும் பொழுது அவர்கள் எல்லாம் அனுபவித்த துன்பத்தை நம் துன்பத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது, நம்மையும் அறியாமல் மனம் அமைதி அடைகிறது. அப்படி அமைதி அடையுமேயானால், மேலும் நம்மை அந்த அன்பு வழியி லேயே செல்லத் தூண்டுகிறது. அன்பு வழியிலே சென்றவர்கள் இரண்டொருவர்களுடைய வாழ்க்கை நமக்குப் பெரியதோர் அனுபவமாகக் காட்சி யளிக்கின்றது. கண்ணப்பரைப் பற்றிப் பாடி வருகின்றார் சேக்கிழார். காளத்தி மலையின் மேலே இருவர் ஏறிப் போனார்கள். கண்ணப்பரும், நாணன் என்பவனும் போனார்கள். சிவகோசரியார் என்ற அந்தணர் அம் மலையிலுள்ள இறைவனைத் தினமும் பூசை செய்கின்றார். ஆனால் நாணனும் சிவகோசரியும் கண்டது என்ன அங்கே? விக்கிரகம், சிலை. ஆனால் கண்ணப்பர் செல்கிறார். அவர் கண்டது என்ன? விக்கிரமும் அன்று சிலையும் அன்று. "மலையிடை எனக்கு வாய்த்த மரகத மணியே’’ என்று போற்றுகின்றார். அந்த அளவோடு நிற்கவில்லை. அந்த