பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£14 - - தேசிய இலக்கியம். காரம், மகார்ம் முதலிய எல்ல்ாம் இருந்த இடத்திலே அவை எல்லாம் அழிந்தன? எஞ்சியது யாது? அன்பு ஒன்றுதான். கண்ணப்பர் வடிவம் எவ்வாறு இருந்த்து? தெரியாது நமக்கு. கண்ணப்பருடைய வடிவத்தை எழுத வேண்டுமானால் என்ன செய்ய முடியும்? அன்பை ஒரு வடிவாக எழுத முடியுமானால் அதுதான் கண்ணப்பர் என்று சேக்கிழார் சொல்லுகிறாரே, அந்தச் சூழ்நிலை அன்பே சிவம் ஆகிவிட்டநிலை. 'ஆடி ஆடி அகம் கரைந்து இசை பாடிப் பாடிக் கண்ணிர் மல்கி, எங்கும் காடி காடி நரசிங்கா என்று, வாடி வாடும் இவ்வாள் நுதலே" (திருவாய்மொழி, 28 18) 'ஆடி அகம் கரைந்து’ என்று பாடுகிறார். ஆடுதல் எதை எதையோ நினைத்துக் கொண்டு ஆடுவதாக நினைக்கிறோம். அந்த ஆட்டம் அணுக்களின் ஆட்டம். ஆண்டவனுடைய ஆட்டம். உள்ளே இருந்து உந்துகின்ற ஆட்டம், கெட்டியான பொருள் கரைந்தால் என்ன ஆகும்? ஒட ஆரம்பிக்கும் அல்லவா? அதுபோன்று அகம் கரைந்த தனால் வருகின்ற ஆட்டம். நாம் வெறும் ஆட்டம் ஆடுகிறோம். உள்ளம் கரையவேயில்லை. ஆனால், ஆழ்வார் கூறும் அந்த ஆட்டம் அகம் கரைந்து வருகின்ற ஆட்டம். 'அகம் கரைந்து ஆடி ஆடி நரசிங்கா என்று அந்த பெயர் வெளிப்படும்பொழுது வாடி வாடும் இவ்வாள்துதலே என்று சொல்லுவார். வாள் நுதல் என்ற சொல்லுக்கு ஒளி பொருந்திய நெற்றியினை உடைய பெண் என்பது பொருள். வாடுதல் என்ற சொல்லுக்கு வாடிப்போதல் என்று பொருள். வாடிப் போய்விட்டால் ஒளி பொருந்திய நெற்றி எங்கே கிடைக்கும்? இந் நிலை ஏற்படு முன்னர் இருந்த ஒளி யிருக்கிறதே அது உட்ம்பினுடைய ஒளி. பின்னர் உடல் வாடி விட்ட நிலையில் ஏற்படும் ஒளி இருக்கிறதே அது இந்த