பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 தேசிய இலக்கியம் பாத்திரங்கள். பெருங்காப்பிய ஆசிரியர் பெரிதும் விரும்பும் பாத்திரங்கள் அல்ல. நடந்த ஒன்றைக் கூறவேண்டிய கடப்பாடு பெற்ற ஆசிரியர், குணாதிசயங்களை எடுத்துக் காட்டுவதற்காகவே பாத்திரங்களைப் படைக்கும் உரிமை அற்றவராகிவிடுகிறார். அதனால் பெருங்காப்பியத்தில் காண வேண்டிய உணர்ச்சிப் பெருக்கில் சில குறைந்தே காணப் பெறுகின்றன. இக் குறைகளை முழுதும் போக்கிக் காப்பியஞ் செய்தவன் கம்பனேயாவான். எனவே, திருத்தொண்டர் புராணம் தமிழ்நாட்டில் வளர்ந்த இலக்கியப் பெருக்கில் ஒரு சிறந்த உறுப்ாகவே அமைந்துவிடுகிறது. - காப்பியம் என்றாலே, அதில் தக்கதோர் இடத்தை வருணனைப் பகுதி பெற்றுவிடும். கவிதைக்கலை நன்கு தழைத்த காலத்தில் காப்பியம் தோன்ற ஆரம்பித்தமையால் வருணனைப் பகுதி மிகுதியாகக் காப்பியங்களில் இடம் பெற்றது. இயற்கை பற்றிக் கூறும் வருணனைகூடக் காலப் போக்கில் மாறுபடலாயிற்று, பத்துப்பாட்டில் ஒன்றான குறிஞ்சிப்பாட்டில் நூற்றுக்கணக்கான பூக்கள் குறிக்கப் பெறினும் அவை அகராதிபோல் அடுக்கப்பெற்றுள்ளன. இப் பூக்களின் பெயர்கூற வந்தாரே தவிர ஆசிரியர் இவ்விடத்தில் வருணனை பேச வரவில்லை என்பது உண்மைதான். ஆனால், மணிமேகலையில் மலர்வனம் புக்க காதையின் இறுதிப் பகுதி இவ்வாறே மலர்களையும் மலர்ச் செடிகளையும் கூறினும், தனி அழகு பெற்ற கவிதையால் புனையப் பெற்றுள்ளது. இதேபோல் பி. ற் கால இலக்கியங்கள் வருணனையை ஒரு தனிக் கலையாக வளர்த்துள்ளன. வருணிக்கப்பெறும் பொருள்களுள் பெண்ணும் ஒன்று. பெண்ணை வருணிப்பதில் சிந்தாமணியாசிரியர் மிகக் கை தேர்ந்தவர். பல இடங்களில் அளவுக்கு மிஞ்சிய வருணனை யைத்தந்து கற்பவர் மனத்தைக் கலங்க அடிக்கும் இயல்பை அவர்பால் காணலாம். ஆனால், இந்தப் பிழையைச் சேக்கிழார் நீக்கிவிடுகிறார். காப்பியம் என்ற முறையில் சேக்கிழாரும் பெண் வருணனை கூறினும், தம் நூலின்