பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<劈。*· ஞானசம்பந்தன் 繼飄 பெருமைக்கும், அமைதிக்கும் ஏற்பவே அந்த வருணனையை அளவுக்குள் நிறுத்திக்கொள்கிறார். இவற்றையெல்லாம் கொண்டு நோக்கின், சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம், தமிழ்நாட்டின் காப்பிய வளர்ச்சியின் ஒரு சிறந்த பகுதி என்பது நன்கு விளங்கும். ஆனால், புராணம் என்று. பெயர் பெற்ற காரணத்தால்போலும் இன்று இக் காப்பி யத்தை ஏனைய காப்பியங்களைப்போல் போற்றுவார் குறை வாக இருக்கின்றனர். பல்வேறு சரிதங் கூறும் இதனைக் காப்பியமாகக் கூறல் இயலுமா ? என்ற ஐயத்திற்கு விடை கூறுவார் போன்று சேக்கிழார் தடுத்தாட்கொண்ட புராணத் தின் இறுதியில், தமது காப்பியத் தலைவராகிய நம்பி ஆரூரர் திருத்தொண்டத் தொகை பாடிய சந்தர்ப்பத்துடன் அப் பகுதியை முடித்துக்கொள்கிறார். மேலும், அவர் கூறியன வற்றை விரித்துக் கூறுகிறேன் என்று கூறி, ஏனைய சரிதங் களை இடையே கூறத் தொடங்குகிறார். இதற்குமுன் யாரும் மேற்கொள்ளாத முறையில் இவர் காப்பியம் செய்தாலும், தமக்கு முன்னர்த் தோன்றிய நூல் களையெல்லாம் பழுதநக் கற்றுத் தேர்ந்துள்ளார் என்பது, இக் காப்பியத்தைக் கற்பார் அறியாமல் இருக்க இயலாது, சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஒவ்வோர் அடியில்தானே ஒவ்வோர் அடியாரைக் குறிக்கிறார்? அவ்வாறு இருக்க, அவுர் சரிதத்தைக் கூறுகையில் இடைப்பிறவரலாகப் பிற சரிதம் கூறும் இந்நூலைக் காப்பியம் என்று கூறல் பொருந்துமா என்று கேட்பாரும் உண்டு. திருத்தொண்டத் தொகையை ஊன்றிக் கற்பார் அடியார்களில் ஒவ்வொருவரையும் பெய ரளவில் சுந்தரர் குறிப்பிட்டுச் செல்கிறார் என்று நினைத்துவிட மாட்டார்கள். ஒவ்வோர் அடியாருடைய சரித்திரத்தையும் நன்றாக மனத்துட்கொண்டு. அச் சரிதத்தைப் பருப்பொரு ஒளாக நோக்குவார் என்ன கருத்துக் கொள்ளமுடியுமோ அதனை அவ்வடியார்க்கு அடை மொழிகளாகப் பெய்தே சுந்தர் திருத்தொண்டத்தொகை பாடுகிறார். இல்லையே. தேசீ ..—?