பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் ig சிறப்பாகச் சைவ உலகும் இப் பெரியோர்களை அறிய முடி யாமல் போயிருக்குமன்றோ? இது கருதியேதான் சேக்கிழார் ஒவ்வொரு சருக்க முடிவிலும் காப்பியத் தலைவராகிய சுந்தரருக்கு வணக்கம் செலுத்துகிறார். ஈசன் அடியார் பெருமையினை எல்லா உலகுந் தொழுதேத்த......திருத் தொண்டத் தொகைமுன் பணித்த திருவாளன்’ என்று அவரைச் சேக்கிழார் பாராட்டுகிறார். பல வகையாலும் நோக்குமிடத்துச் சேக்கிழார் புதிய வழியைத் தமக்கென வகுத்துக்கொண்டே இக் காப்பியம் செய்கிறார் என்பது நன்கு விளங்கும். காப்பியஞ் செய்தலே தமிழ் இலக்கியத்தில் புதிய மரபு என்றால், சேக்கிழார் இயற்றிய காப்பியம் அதிலும் புதுமை விளைக்கும் நெறியில் எழுந்தது. திருத்தக்கதேவரின் காப்பியத்தில் பல்வகைச் சுவையும் ஒவ்வோர் அளவுக்கு நிறைந்திருப்பினும் இன்பச் சுவை மிக்கிருப்பதை அறிவோம். இதன் எதிராக உலகியல் இன்பத்தை நாடி அடைந்து, அது புளித்துவிட்ட தமிழனின் மறுமலர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக இலங்குவது சேக்கிழார் காப்பியம். எனவே, அதில் பக்திச்சுவை மிகுதியாகக் காணப்படுகிறது. இங்ங்னம் புதிய வழியைத் தமக்கெனச் சேக்கிழார் வகுத்துக்கொண்டாலும் ஓரளவு காலத்தை ஒட்டிய கருத்துகளுக்கு அவர் ஆளாகாமல் இல்லை. சுந்தரமூர்த்திகள் திருத்தொண்டத்தொகை, த மி ழ் நாட்டில் தேசீய இயக்கத்தின் முடிபாகும். இக் கருத்தைப் பின்னர் விரிவாக ஆராய்வோம். அதனை நன்கு உணர்ந் திருந்தும், நூலின் பிற்பகுதியில் விரிவாகப் பாடியும் தம் கருத்தை விளக்கிய சேக்கிழார் கலைமரபை ஒட்டிப்போலும் உபமன்யு மூனிவர் கதையைச் சேர்த்திருக்கிறார். தாம் செய்த இலக்கியம் நிலைப்பதற்கு இவை எல்லாம் இன்றியமை யாதன என அவர் நினைத்தார்போலும். சங்க காலத்தில் நிலவிய உணரவுக் கவிதை மறைந்து, வேற்று வடிவம் கொண்ட இடைக்காலத்தில் சிறந்து நின்ற