பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 தேசீய இலக்கியம் இளங்கோ, சாத்தனார், திருத்தக்கதேவர், சேக்கிழார், கம்பர் என்ற இவர் ஐவரும் இப் புதுமுறைக் கவிதையை வளர்த்திருக்கின்றனர். இவருள் இளங்கோவும் சாத்தனாரும் வாழ்க்கையை உள்ளவாறே கண்டு கூறும் கவிஞர் என்று கூறலாம். தேவர், உணர்வுக் கவிஞர் (Romantic Poet) என்று அழைப்பதற்குரியவர், சேக்கிழார் வாழ்க்கைத் தத்துவத்தின் அடிப்படையையும், அதன் பயனையும் அறிந்து கூறிய கவிஞர் என்று கூறலாம். கம்பரை இலக்கியக் கவிஞர் எனக் கூறலாம். முன்னையோர் இருவரும் பொருள்கள் உள்ள நிலையையும், தேவரும் கம்பரும் அவை எவ்விதம் இருக்கவேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ அந்த நிலையையும், சேக்கிழார், பொருள்கள் எவ்வாறு இருந்தால் நலம் பயக்குமோ அந்த நிலையையும் கூறும் கவிஞர்கள் ஆவர். கற்பனை என்பது இப் புலவர் பெருமக்கள் ஐவருக்கும் உரிமையாயினும், அக் கற்பனை பல்வேறு துறை களில் வேலை செய்திருக்கிறது. முதற் கவிஞர் இருவருக்கும் கற்பனை காலத்தோடு ஒட்டிய பொருள்களிலும் புதியன புனைவதிலும் பயன்பட்டிருக்கிறது. தேவருக்கும் கம்பருக்கும் அழகிலும் வியப்பிலும் அனுபவத்தைத் தோற்றுவிக்க இக் கற்பனை பயன்பட்டிருக்கிற்து. சேக்கிழாருக்கு உயர்ந்த ஆன்ம முன்னேற்றத்தில் இது பயன்பட்டிருக்கிறது. இளங்கோவுக்கு ஆழமும், சாத்தனாருக்கு வியப்பும், தேவருக்கு இன்பமும், சேக்கிழாருக்கு ஆன்ம ஒருமைப்பாடும் கம்பருக்கு இவை அனைத்தும் சிறப்பியல்புகளாக அமைந் துள்ளன.


4. தேசீய இலக்கியம்


ஏழாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் தோன்றிய சமயப் புரட்சியின் முடியே பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற் பகுதியில் பெரிய புராணமாக முகிழ்த்தது என்று முன்னர்க் கண்ட்ோம். ஒரு குறிப்பிட்ட கால எல்லையில், குறிப்பிட்ட