பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 2? கருத்தின் முடியாக இந்நூல் தோன்றிற்று என்ற காரணத்தால். பெரிய புராணம், முன்னும் பின்னும் தொடர்பற்றுத் தமிழ் இலக்கிய உலகில் ஒற்றையாக நிற்கிறதுபோலும் என்று கருதி விடவேண்டா. சிறந்த இலக்கியத்தை ஆக்கும் கலைஞன் தன் இனத்திலிருந்தும் காலத்திலிருந்தும் விடுபட்டு நிற்பவன் அல்லன். அவனுக்கு முன்னர் உள்ள காலத் தோடும் பின்னர் வரப்போகும் காலத்தோடும் தொடர்பு கொண்டிருப்பான். அவன் காலத்தில் வாழும் மக்களின் சிறந்த பண்பாடுகளை எடுத்துக் கூறும் ஆசிரியனும் ஆவான். அவன் இந்தத் தொடர்பு காரணமாக அவன் காலத்தில் வாழும் ஏனைய கலைஞர்களோடும் நாம் தொடர்புகொள்ள நேரிடுகிறது. - இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய சிலப்பதிகாரத் திலிருந்து கம்பராமாயணம் வரையில் தோன்றிய காப்பியங் களை எடுத்து ஆராய்ந்தால், மேலாகக் காணப்பெறும் பல வேற்றுமைகள் போக, ஆழத்தில் உள்ள ஒற்றுமையும் நன்கு தெரியும். காரணம், இந்நூல்கள் நிலைத்த தமிழ் மரபை அடிப்படையில் கொண்டு, தமிழ் ம்ரபு அறிந்த கலைஞர்களால் செய்யப் பெற்றமையேயர்கும். பன்னிரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய மூன்று பெருநூல்கள் சமயச் சார்புடனேயே தோன்றின. மூன்று பெரும் புலவர்கள் இந் நூற்றாண்டில் வாழ்ந்தனர். சேக்கிழாரும் கம்பரும் முறையே பெரியபுராணத் தையும் இராமாயணத்தையும் இயற்றினர். கம்பருக்குச் சற்று முன்னோ அன்றிப் பின்னோ தோன்றிய ஒட்டக்கூத்தர் தம் பல்வேறு நூல்களுக்கும் இடையே செய்த அரும்பெரும் நூல் தக்கயாகப் பரணியாகும். மூவருலா பாடித் தம் மன்னரைச் சிறப்பித்த ஒட்டக்கூத்தர், தம் சிறந்த இலக்கியமாகிய பரணிக்கு, சிவபெருமான் கதைகளில் ஒன்றை எடுத்துக் கொண்டது ஆராய்தற்குரியது. காலத்தின் வே க மு. ம் சூழ்நிலையும் கூடியே கூத்தரைத் தக்கயாகப் பரணி" பாடுமாறு செய்தது என்று கூறல் மிகையாகாது.