பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 தேசிய இலக்கியம் தும் ஆகும். இதிலிருந்து, இலக்கியம் என்பது, நாம் கானும் சரித்திரத்திற்கு உதவி செய்யும் கருவியாகத் திகழும் என்பதையும் அறியலாம். சரித்திரத்தைப் பொறுத்தமிட்டில் ஒரு குறை உண்டு. ஒரு நாட்டின் சரித்திரம் அம் மக்களின் Lop வாழ்க்கையையும், நாகரிகத்தின் புறப்பகுதியையும் மட்டும் குறிக்கும் இயல் புடையது. இவ்வுலக வாழ்க்கையில், வாழ்க்கையின் புறப் பகுதியில் அவர்கள் என்ன செய்து முடித்தார்கள்: எவற்றில் தோல்வியுற்றார்கள் என்பவற்றைமட்டுமே அந்தச் சரிதம் கூறுகிறது. ஆனால், அம் மக்களின் அக வாழ்க்கை யில் என்ன நடைபெற்றது? மனத்துள் என்ன போராட் டங்கள் நடைபெற்றன, மன உலகில் என்ன சாதிக்க வேண்டும் என்று விரும்பினர்? எவ்வளவு தூரம் வெற்றி பெற்றனர் என்பவற்றை அறிய வேண்டுமான்ால் அவர்கள் இலக்கியம் ஒன்றுமட்டுமே துணைபுரிதல் கூடும். ஒரு சமுதாயத்தின் புற வாழ்க்கையும் அக வாழ்க்கை யும் பெரிதும் தொடர்புடையன என்பதை மறத்தல் ஆகாது புற வாழ்க்கை செம்மையாக அமைந்தபொழுதுதான் அக வாழ்க்கை முன்னேற்றமடையும். சங்க காலத் தமிழன் வாழ்க்கையில் சமயத் துறையில் அவனுக்கு இருந்த உறுதிப் பாட்டைத் திருமுருகாற்றுப்படை அறிவிக்கிறது. இரண்டா வது, சிலப்பதிகாரத்திலும் இவ்வுறுதிப்பாடே காட்சியளிக் கிறது. ஆனால், சில இடங்களில் இது சிறிது ஆட்டம் கண்டுவிட்டதையும் அறிய முடிகிறது. கவுந்தி அடிகளுக்கு, மதுரை செல்லும் வழி கூறும் அந்தணனாகிய மாடலன், பவகாரணி, இட்டசித்தி முதலிய குளங்களில் அவர்களை மூழ்கிச் செல்லுமாறு கூறுவதும், அதற்குக் கவுந்தியடிகள் மறுப்புக் கூறுவதும் ஆழ்ந்து நோக்கற்குரியன. மாடலன் கூறியவற்றைச் சமணத் துறவியாகிய கவுந்தியடிகள் சமய வேறுபாட்டால் மறுத்துவிட்டார் என்று மட்டும் கொண்டு விடக்கூடாது. மக்களுள் உறுதி தளர்ந்து இது செய்யலாமா அது செய்யலாமா என்று ஊசலாடும் மனநிலை வந்த ை