பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அ. ச. ஞானசம்பந்தன்

25

யையே இப்பகுதி குறிப்பதாகக் கொள்ளல் வேண்டும். அடுத்துத் தோன்றிய மணிமேகலையில் தமிழ் இனத்தில் தோன்றிய இம்மன ஆட்டம் மிகுதிப்பட்டுக் காட்சி தருகிறது. எச் சமயமாயினும் அதனை அப்படியே எடுத்துக் கூறலாமல்லவா? அவ்வாறு செய்யாமல் மணிமேகலை தத்தளிப் பதை அந்நூல் நன்கு எடுத்துக்காட்டுகிறது. சமயக் கணக்கர்தம் திறம் கேட்ட காதை’ என்ற ஒன்று மணிமே கலையில் தோன்றுவது அக்காலத் தமிழ் இனத்தின் மன நிலையைப் பளிங்குபோல் நமக்கு எடுத்து விளக்குகிறது. அடுத்துவரும் சிந்தாமணி, இவ்வாட்டம் அடங்கிக் கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிவு ஏற்படுவதை அறிவுறுத்துகிறது.

பூரணத் தெளிவு ஏற்படவில்லை என்பதை, பிள்ளையார் பிடிக்க அது வேறு ஒன்றாய் முடிந்தது போல உள்ள அவ் விலக்கியமே சான்று பகரும். துறவின் மேன்மை கூறவந்த அவ்விலக்கியம், நிலையாமை கூறி மக்கள் மனத்தைத் திருப்பத் தோன்றிய அவ்விலக்கியம், இவற்றை ஓரளவு கூறி, இவற்றிற்கு நேர் முரணான சிற்றின்பத்தை மிகுதிப் படுத்திக் கூறியது தமிழ் இனத்தின் மனம் இன்னும் செம்மையடையவில்லை என்பதையே நிறுவுகிறது. அக் காலத்தும் அதன் பின்னரும் தோன்றிய சமயாசாரியர்களும் ஆழ்வார் களும் தளர்ந்துவிட்ட இத்தமிழ் இனத்தை உறுதி நிலைக்குக் கொணர அரும்பாடுபட்டிருக்கின்றனர். அவர்கள் தோன்றிச் செய்த இவ்வரிய காரியத்தை ஏன் பெளத்தமும் சமணமும் செய்யவில்லை என்ற வினாத் தோன்றுமாகில் அது நியாய மானதே ஆகும்.

இவ் வினாவிற்கு விடை கண்டால் அதிலிருந்து பல உண்மைகள் வெளிப்படும். சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி ஆகிய மூன்று பேரிலக்கியங்களும் சிறந்த தமிழரால் ஆக்கப்பெற்றன என்பதில் தடை ஒன்றும் இல்லை இவற்றுள் முதலாவதாகிய சிலப்பதிகாரம் தமிழன் ஒருவன் ரிேத்ங் கூறும் நூல். மணிமேகலையும் அவ்வாறே. என்றாலும் என்ன வேற்றுமை? மணிமேகலை சமயப் பிரசாரம் செய்த காரணத்தால் சிலம்பு பெற்ற பெருமையை அடைய