பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 தேசிய இலக்கியம் இயலாமல் போயிற்று, ஆனால், இதே சமயப் பிரசாரம் செய்த பெரிய புராணம் வெற்றியடையவும். இம் மணிமேகலை வெற்றி பெறாதது விந்தையன்றோ? இவை இரண்டிற்கும் இடையே தோன்றிய சீவக சிந்தாமணி சிலப்பதிகாரம்போல் தமிழன் சரிதம் கூறவில்லை. என்றாலும், சமயப் பிரசாரமும் செய்யவில்லை. செய்தாலும் இலை மறைவு காய் மறைவாகச் செய்ததே தவிர, மணிமேகலை, பெரிய புராணம் என்பவை போல நேரிடையாகச் செய்யவில்லை. எனவே, சமயப் பிரசாரம் செய்யாத சிலம்பு, சிந்தாமணி என்ற இரண்டையும் விட்டுவிட்டு, மணிமேகலையையும் பெரிய புராணத்தையும் எடுத்துக்கொள்வோம். இரண்டும் கவிதை நயம் உடையன என்றாலும், கூறப்பெற்ற பொருளால் ஒன்று நாட்டில் செல்வாக்கை இழந்தது; மற்றொன்று செல்வாக்கைப் பெற்றது. பெளத்தமும் சமணமும் உலகிடைத் தோன்றிய சிறந்த சமயங்களில் இரண்டு என்பதில் ஐயம் இல்லை. அவை தோன்றிய காலத்தில் அவற்றைத் தோற்றுவித்த மக்கள் இனத்திற்கு இவை பெரிதும் பயன்பட்டன. ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இவை இரண்டும் ஏலாத சமயங்கள் ஆயின. சிறந்த கொள்கைகளையுடைய பெளத்தம், துக்கம், துக்க உற்பத்தி, துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் என்ற அரிய உண்மைகளைக் கூறியிருப்பவும் கடவுள் பற்றிய ஆராய்ச்சியில் கவனம் செலுத்தவில்லை சமணமோ பெண் களுக்கு வீடுபேறு கிட்டாது என்னும் கொள்கையுடையது. இவை இரண்டும் சரியா, தவறா என்ற ஆராய்ச்சி இங்கு நமக்குத் தேவை இல்லை. ஆனால், இவை தமிழ் மனப் பண்பாட்டுக்குச் சிறிதும் ஒவ்வாதவை ஆகும். ஆகவே, தான் இவ்விரு சமயங்களும் எவ்வளவு பரவினும் தமிழ் நாட்டில் கால்கொள்ளாமற் போயின. இவற்றை ஆதரித்த இலக்கியங்களும் செல்வாக்குப் பெறாமற் போயின. ஆனால், சிலப்பதிகாரம் சைனர் இயற்றியதே. எனினும் சமயப் பிரசாரம் ஒரு சிறிதும் செய்யாமல் பிற சமயக் கடவுளரை மிகுதியும் போற்றி, நெஞ்சை அள்ளும் காப்பியமாக மட்டும்