பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i. அ. ச. ஞானசம்பந்தன் 37 அமைந்துவிட்டது. ஆகவேதான் அந்த ஒரு நூல் மட்டும் இப்போது உண்மைக்கு மாறுபட்டு இன்றும் செல்வாக்குடன் வாழ்கிறது. இந் நாட்டுப் பண்பாட்டிற்கு ஏற்ப, இந் நாட்டு மக்களால் தோற்றி வளர்க்கப்பெற்ற சைவம், வைணவம் இவைபற்றிப் பேசும் நாயன்மார்களும் ஆழ்வார்களும் தோன்றியவுடன் அவர்களைப் பின்பற்றி நாடு செல்லத் தொடங்கியது. இத்தகைய நாயன்மார்கள் வரலாறு கூறப் புகுந்தமையின் பெரிய புராணம் ஒரு சிறந்த தேசீய இலக்கியம் ஆயிற்று. இதுபற்றிச் சற்று விரிவாகவே ஆராயலாம். ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத்தொகை என்ற ஒன்றைப் பாடினார். தம் காலத்திலும், தமக்கு முன்னரும் வாழ்ந்த சைவ அடியார்கள், தமக்குத் தெரிந்தவர்கள் அனை வருக்கும் அடியேன் என்று கூறிப்போனார், சுந்தரர் அருளிச்செய்த 63 நாயன்மார்கள்தாமா. தமிழ்நாட்டில் அது வரை இருந்தார்கள்? அதற்குமேல் எத்தனையோ பேர்கள் இருந்திருக்கலாம். ஆனால், அவர் தமக்குத் தெரிந்தவரையில் கூறிச் சென்றார். தாம் அறிந்து கூற முடியாதவர்களை யெல்லாம் ஒருங்கு சேர்த்துத் தொகை அடியார்கள் கூட்டத்தில் வைத்துக் கூறியுள்ளார். பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன் திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன் முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன் அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே. தமக்கு முன் இருந்தவர்கள், பின்னர் இருக்கப் போகிறவர்கள் ஆகிய அனைவரும் இதில் இடம் பெறுகின்றனர். ஆனால்