பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#8 தேசிய இலக்கியக் அவர் கூறிய பெயர்களைக் கூர்ந்து நோக்கின் சில ஐயங்கள் எழாமற் போகா. - தொகை அடியார்களைக் கூறும்பொழுது மிகப் பரந்த நோக்கம் உடையவராகக் காணப்படுகிறார் சுந்தரமூர்த்திகள். சிவ வழிபாடு ஒரு காலத்தில் உலகெங்கும் பரவி இருந்தது" அத்தகைய சிவனடியார்கள் தமிழ்நாட்டில் மட்டுந்தானா இருப்பார்கள்? எனவேதான், சுந்தரர் பத்தராய்ப் பணி வார்கள், சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார், அப்பாலும் அடிச்சார்ந்தார். இவர்கட்கெல்லாம் அடியேன் என்று கூறிச் செல்கிறார். இதிலிருந்து அவருடைய பரந்த மனப் பான்மை நன்கு விளங்கத்தான் செய்கிறது. என்றாலும் இக் கருத்துடன், முன்னர் உள்ள எட்டுப் பாடலையும் இறுதிப் பாடலையும் படித்தால் சற்று வியப்பாகவே உளது. இவற்றில் கூறப்பெற்ற அடியார்களுள் ஒருவராவது தமிழர் அல்லாத வேற்று இனத்தவர் அல்லர். கூற்றுவ நாயனார் களப்பிரர் ஆயினும் தமிழ்நாட்டில் பிறந்தவர் என்று நினைக்கவேண்டி யிருக்கிறது. களப்பிரர் பல ஆண்டுகள் இங்குத் தங்கி ஆட்சி செய்தவர்கள். ஆதலால், அம் மரபில், வேற்றுச் சமயத்தவராகிய களப்பிரர் கூட்டத்தில், சைவராகக் கூற்றுவர் தோன்றியமையின் சேர்த்துக்கொள்ளப்பட்டார் போலும்! இங்ங்ணம் பொறுக்கி எடுத்துத் தமிழ்நாட்டில் தோன்றிய அடியார்களை மட்டும் கூறவேண்டிய காரணம் என்ன? தமிழ்நாட்டினர் அல்லாத ஏனையவர்களை அவர்அறிந்திருக்க மாட்டார் என்ற காரணம் வலிவுடையதாகத் தெரியவில்லை. தாம் அறிந்து தம் பாடல்களில் வேறு இடங்களிற் குறிக்கும் பெரியவர்களைக்கூடத் திருத்தொண்டத் தொகையில் குறிப் பிடவில்லை. மார்க்கண்டரும், பதஞ்சலியும், வியாக்கிர பாதரும் இதற்குச் சான்றாகும். மார்க்கண்டரைப் பற்றிப் பல பாடல்களில் குறிப்பிட்டு அவர் வரலாறு முழுவதையும், அந்த ணாளன்உன் அடைக்கலம் புகுத அவனைக் காப்பது காரண மாக