பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் ĝğ வரலாறு எங்கே போய்விட்டது? இவ்வளவு அழகிய நூல் செய்த புலவர், பக்தர், அறிஞர், அமைச்சர், சான்றோர் ஆகிய சேக்கிழாரைவிடச் சிறந்த பாத்திரம் எங்கே கிடைக்கும் காப்பியம் செய்ய? ஏன் அவரைப்பற்றி ஒரு நூல் தோன்ற வில்லை? சேக்கிழார் புராணம் என்று இன்று வழங்கும் நூலில்: எத்தகைய சுவையையும் காணமுடியாது என்பதை அதைப் படித்தார் நன்கு அறிவர். சேக்கிழாருக்கு முன்னும் பின்னும் இத்தகைய ஒரு காப்பியம் தோன்றாமைக்குக் காரணம் ஒன்றுதான். சேக்கிழாரைப் போன்ற கலைஞர் அவருக்கு முன்னும் தோன்றவில்லை; பின்னும் தோன்றவில்லை. அவரது கல்வி, அறிவு, புலமை, வாக்குவன்மை, கலைத்திறம், பக்தி முதலிய பண்புகளில் பலவற்றையும் பெற்றவர் முன்னும் பின்னும் உண்டு. ஆனால் இவை அனைத்தையும் ஒருசேரப் பெற்றவர் அவர் ஒருவரே. இவை அனைத்தையும் பெற்றதோடு நின்றுவிடவில்லை அந்தப் பெருந்தகை. இவை அனைத்திலும் மேம்பட்ட ஒன்றையும் அவர் நிரம்பப் பெற்றிருந்தார். அதுவே அவருடைய பண்பட்ட மனம். பக்திச் சுவையில் ஈடுபடப் பண்பட்ட மனம் வேண்டும். அதைச் சேக்கிழார் பெற்றிருந்தார். அடியார்கள் இறைவன்மேல் பக்தி பூண்டுள்ளனர். அவ்வநுபவம் அவர்கள் அகமனத்தின் அடிப்படையில் நிறைகிறது. பிறகு அவ்வநுபவம் வெளிப்பட்டுக் கவிதையாக முகிழ்ப்பதும் உண்டு. அவ்வாறு வெளிவந்த கவிதைகளே தேவாரம், திருவாசகம், பிரபந்தங்கள் என்பவை. ஆனால், தம் அநுபவத்தைத் துணைகொண்டு சென்று பிறர் பெற்ற அநுபவத்தை அறிவது மிகமிகக் கடினம். இத்தகைய நிலைக்குக் கற்பனையின் உதவி தேவை. அக் கற்பனை, ஏனைய கவிஞர்கட்கு உதவுவதுபோல், இத்தகைய பக்திக் கவிதை புனையும் கவிஞனுக்குப் பயன்பட்டால் பயன் இல்லை. அறிந்ததுகொண்டு அறியாததை உணர்த்தும் பிற