பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 97 திருநாவுக்கரசு சுவாமிகள் ஏழாம் நூற்றாண்டில் வசித்தவர். சேக்கிழாரோ பன்னிரண்டாம் நூற்றாண்டில் திகழ்ந்தவர். ஆனால், திருநாவுக்கரசர் நடந்துவரும் காட்சியை இதோ வர்ணிக்கிறார். நேரடியாக அப் பெருமானைச் சேக்கிழார் காண்வில்லை என்பதை நாம் அறிவோம். ஆனாலும், தம் பாடல்மூலம் இன்று வாழ்கின்ற நாம்கூட அவரைக் காணுமாறு செய்துவிடுகிறார். - 'தூயவெண் ணிறுதுதைந்தபொன் மேனியுக் தாழ்வடமும், காயகன் சேவடி தைவருஞ் சிந்தையும், கைக்துருகிப் பாய்வது போல்அன்பு நீர்பொழி கண்ணும், பதிகச் செஞ்சொல் மேயசெவ் வாயும் உடையார் க்கtைர் ள்ளே." புகுந்தனர் விதியு (பெ. பு-நாவுக்கரசர் 140) (தாழ்வடம் - உருத்திராட்ச மாலை நாயகன்...சிந்தைஇறைவன் திருவடி மறவா மனம்.) "மார்பாரப் பொழிகண்ணிர் மழைவாருக் திருவடிவும், மதுர வாக்கில் சேர்வாகும் திருவாயில் தீக்தமிழின் மாலைகளும், செம்பொற் றாளே சார்வான திருமணமும், உழவாரத் தனிப்படையும் தாமும் ஆகிப் பார்வாழத் திருவிதிப் பணிசெய்து பணிந்தேத்திப் பரவிச் செல்வார்’ - (பெ. பு.-நாவுக்கரசர்; 228) பக்திச்சுவை சொட்டப் பாடும் சேக்கிழாரது கவித் திறத்தால் நாவுக்கரசரை நேரே காண்பதுபோல் நாம் காண முடிகிறது. இத்தகைய கவிதைகளை நன்கு அதுபவிக்க