பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேசீய இலக்கியம் வேண்டுமாயின் ஆசிரியரைப்பற்றியும் நன்கு அறிதல் வேண்டும். ஆசிரியரது மனநிலையேகூடச் சில இடங்களில் கவிதைக்குப் பொருள் விரிப்பதாக இருக்கும். சங்ககாலப் பாடல்களையும், சிலப்பதிகாரத்தையும் அநுபவிப்பதற்கு அவற்றை ஆக்கிய கலைஞர்களின் வாழ்க்கைபற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற தேவை இல்லை. இளங்கோவடிகளைப்பற்றி ஆதாரமுள்ள ஒரு தகவலும் இதுவரையில் கிடைக்கவில்லை. என்றாலும், சிலப்பதி காரத்தை அநுபவிக்கவும், அது நெஞ்சை அள்ளும் காப்பியம் என்று காணவும் அவரைப்பற்றிய வரலாறு தேவையாக இருக்கவில்லை. ஆசிரியரைப்பற்றித் தெரிந்தால்தான் இந் நூலை நன்கு அநுபவிக்க முடியும் என்று இதனைப்பற்றிக் கூறமுடியாது. ஆனால், இதனுடன் ஒருங்கு தோன்றிய தாகக் கூறப்பெறும் மணிமேகலைபற்றி அறியவும், அதனை அநுபவிக்கவும் வேண்டுமாயின் சாத்தனாரைப்பற்றி நன்கு அறிந்துகொள்ளவேண்டும். இல்லாவிடின் மணிமேகலையைக் கற்கலாம்; அறியலாம்; அநுபவிக்க இயலாது. "டான்டே (Dante) என்ற அறிஞர் தெய்வீக இன்பியல்: நாடகம் என்ற ஒன்றை எழுதியுள்ளார். ஆனால், திறனாய்வாளர் அனைவரும் கூடி, இந் நாடகத்தை நன்கு அநுபவிக்கவேண்டுமாயின் டான்டே'யின் வாழ் க் ைக வரலாறு அவசியம் தெரிந்திருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இதற்குக் காரணம் ஒன்றுண்டு. சிற்சில நூல்களில், கவிஞன் தன்னை வேறாகப் பிரித்துக்கொண்டு விடுகிறான். தனது இலக்கியத்தில் நம்மோடு சேர்ந்து அவனும் மூன்றாம் மனிதன்போல் உலவுகிறான். அத்தகைய இலக்கியங்களில் அவன் உதவியின்றியும், அவனைப்பற்றி ஒன்றும் அறியாமலும் நாம் புகுந்து அநுபவிக்கலாம். அவனைப்பற்றி அறிந்துகொள்வதால் இலக்கியத்தை அதிக மாக அநுபவித்தோம் என்று கூறுவதில்லை. ஆனால், டான்டே சாத்தனார், சேக்கிழார் போன்றவர்கள் இயற்றிய