பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

r 40 தேசீய இலக்கியம் மனப்பான்மை வேறு. என்ன மனநிலை இருந்தால் இந்தக் காரியம் செய்ய முடியும்? அத்தகைய மனநிலையை நம் போன்றவர்கள் கற்பனை செய்வதுகூட இயலாது. இவ் வடியார்கள் தாம் கொண்ட கொள்கைக்காக எத்தகைய தியாகத்தையும் செய்தனர். ஏறத்தாழ அதே மனப்பான்மை கொண்டிருந்தமையால்தான் சேக்கிழார் அந்தத் தியாகங் களின் உட்கருத்தை அறிய முடிந்தது. சேக்கிழார் போலவே இன்னும் சிலரும் இக்கருத்தை அறிந்திருக்கலாம் எனினும் அவர்கள் கவிதைக் கலை கைவரப் பெறாதவர்களாக இருந்திருக்கலாம். இவை இரண்டும் ஒருங்கே வாய்க்கப் பெற்றமையின் சேக்கிழார் பெரிய புராணத்தை இயற்றினார். நாயன்மார் வரலாறுகளையும், அவற்றில் சிறப்புடன் மிளிரும் பக்திச் சுவையையும் வேண்டாதவர்களுக்குக்கூடப் பெரிய புராணம் பயன்படும். ஒவ்வொருவரும் எல்லா வகை இலக்கியத்திலும் ஈடுபட வேண்டும் என்று கூறுவது மிகை யாகும். இலக்கியம் என்பது பலவகைப் பண்பாடுகளும் நிறைந்த பல்வேறு பாத்திரங்களைப்பற்றிப் பேசுவது. அவ் விலக்கியத்தைக் கற்கின்ற நமக்கும் தனிப்பட்ட சில குணங் களும் பண்பாடுகளும் உண்டு. எனவே, இலக்கியத்தை நாம் கற்கையில், நம் கருத்திற்கும் இலக்கியம் கூறும் கருத்திற்கும் முரண்பாடு ஏற்படுதல் இயற்கை எது சிறந்தது என்ற வினாத்தோன்றி நம் பழைய கொள்கைகளுடன் போராட நேரிடுதலும் உண்டு. இலக்கியம் கூறும் அனைத் தையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது இல்லை. என்றாலும், நம்மிலும் வேறுபட்ட அக்கருத்துகளுடன் பழகு வதால் நன்மையே தவிரத் தீமை இல்லை. நம்முடைய கொள்கைகள் சீர்திருத்தம் அடையும். விடாப்பிடியாக நாம் கொண்டுள்ள கருத்துகளோடு ஏனையவற்றை ஏற்றுக் கொள்வதற்கு ஏற்ற சகிப்புத்தன்மை வளரும். இவையே இதனால் பெறும் பயன்கள். மனிதனுடைய பண்பாட்டைச் செம்மைப்படுத்த இலக்கியம் உதவும் பல வழிகளில் இதுவும் ஒன்று. -