பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 4s கத்தோலிக்க மதத்தின் விரோதியான மில்டன் எழுதிய சுவர்க்க நீக்கத்தை எந்தக் கத்தோலிக்கராவது, கொள்கை காரணமாகக் கற்கவேண்டா என்று விடுவதுண்டா? அத்தகைய மனநிலை நம்மிடமும் வளரவேண்டும். அதுவே மனிதன் பெற்ற பண்பாட்டின் அறிகுறியாகும். அல்லற்பட்டு உளையும் மனத்திற்கு அமைதி தரக்கூடுமானால், அவ்விலக் கியம் எந்தச் சமயத்தைச் சார்ந்ததானால்தான் என்ன? நோய் தணிக்கும் மருந்தில் இன்ன நிறம் வேண்டுமென்று கூறுவாரும் உண்டோ? குறிப்பிட்ட ஓர் இலக்கியம் நம் பண்பாட்டை வளர்க்குமா? அன்றி மிருகத்தனத்தைத் தட்டி எழுப்புமா? என்பதைத்தான் நாம் அறியவேண்டும். முன்ன தாயின் எதுவும் விரும்பத் தக்கதே. பக்தி அல்லது அன்பு என்பது கடவுளிடம் செலுத்தப்பட்டாலும், மக்களிடம் செலுத்தப்பட்டாலும் ஒன்றுதான். அன்பு என்ன செய்கிறது? பொறிபுலன்களை அடக்கி, விலங்கு உணர்ச்சியை ஒடுக்கி மனத்தில் அமைதியைத் தருகிறது. இத்தகைய அமைதி வேண்டா என்று கூறும் நல்லார்கள் உலகில் உண்டானால், அவர்களுக்குப் பெரிய புராணம் வேண்டா; ஏனையோர் அனைவரும் துய்க்கக்கூடிய முறையிலேயே அது அமைந்தி ருக்கிறது.


6. குறிக்கோள்
  • மில்டன் என்ற கவிஞன் சுவர்க்க நீக்கம்' என்ற அரிய பெருங் காப்பியத்தை இயற்றினான். அதை அவன் இயற்றி 300 ஆண்டுகள் ஆகின்றன. இன்று வரையில் நூற்றுக்கணக்கான திறனாய்வு நூல்கள் மில்டனைப்பற்றித் தோன்றியுள்ளன. மில்டனுடைய குறிக்கோள் யாது? என்ற ஒரு செய்தியை மட்டும் ஆய்கின்ற நூல்கள் பலப்பல. இங்ங்னம் தோன்றிய நூல்கள் அனைத்தும் மிகச் சிறந்தன என்று இங்கே கூற வரவில்லை. ஆனால், மேல் நாட்டார் தம் இலக்கியங்களின்பால் கொண்ட ஆர்வத்திற்கு இஃது ஓர்