பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4? தேசிய இலக்கியம் எடுத்துக்காட்டாகும். மில்டன் கவிஞனும் அல்லன்: அவன் இயற்றியது காப்பியமும் அன்று; சுவர்க்க நீக்கத்தின் காப்பியத் தலைவன் சாத்தான்தான் என்று கூறும் நூல்களிலிருந்து, "முக்காலத்தும் மில்டனை ஒத்த காப்பியக் கவிஞர்கள் தோன்றவில்ல்ை என்று கூறும் நூல்கள் வரை தோன்றி விட்டன. ஆனால், நம் தமிழ்மொழியைப் பொறுத்தமட்டில் எத்தனையோ இலக்கியங்கள் இருந்தும் ஒரு திறனாய்வு நூலும் இல்லாமல் போய்விட்டது. சமீப காலத்தில் மில்டனைப்பற்றி சி. எஸ். லூயி என்ற அறிஞர் ஒரு நூல் வெளியிட்டார். அதன் தொடக்கத்தில் அவர் கீழ்வருமாறு கூறுகிறார்: கார்க் மூடிகளைக் கழற்றும் சுழல் கம்பி (cork screw)யிலிருந்து, மாதா கோவில் வரை உள்ள பொருள்களில் எதனைப்பற்றி ஆராயப் புகுந்தாலும், ஆராய்பவன் முதலில் அந்தப் பொருள் என்ன வேலைக்காகச் செய்யப்பட்டது? எவ்வாறு அதனைப் பயன்படுத்தவேண்டும்? என்ற இரண்டையும் அறிந்துகொள்ள வேண்டும். இவற்றை நன்கு அறிந்துகொண்ட பிறகுதான் குடிநிறுத்தவாதி. (Temperance worker), சுழல்கம்பி தவறான பயனுக்கு ஏற்பட்டது என்று சொல்லலாம் பொதுவுடைமைவாதி, மர்தா கோவில் தவறான பயனுக்கு ஏற்பட்டது என்னும் முடிவுக்கு வரலாம். முதலில் எதிரே இருக்கும் பொருளை நன்கு அறிந்து கொள்ளவேண்டும். சுழல்கம்பி பெரிய டின்களைத் திறப்ப தற்கும், மாதா கோவில் யாத்திரிகர்கள் உணவருந்துவதற்கும் ஏற்பட்டுள்ளன என்று நினைக்கும் அறியர்மை உடையவர்கள் அவற்றின் பயனைப்பற்றி ஆராய்வது தவறு. சுவர்க்க நீக்கம் கற்கப் புகும் ஒவ்வொருவரும், மில்டன் அதனை என்ன கருத்துடன் செய்தான் என்பதை அறிதல் வேண்டும்.” இந்த மேற்கோள் ஓரளவு நீளமானதுதான். ஆனாலும் நமக்குப் பெரிதும் பயன் தருவதாகும். சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணத்தின் பயனை ஆராய்வதற்கு முன், லூயி சொல்வதுபோல அவர் என்ன கருத்துடன் அல்லது