பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 தேசிய இலக்கியம் விரிவாக அமைந்த கதையை அவன் எடுத்துக்கொண்டான். சேக்கிழாரோ காப்பியம் இயற்றவேண்டும் என்ற எண்ணத்தை முதலில் கொண்டவரல்லர். சீர்குலைந்திருந்த தமிழ் நாட்டைச் சீர்படுத்துவதே அவருடைய முதல் நோக்கம் எதுபற்றிப் பாடலாம்? என்ற வினாவைச் சேக்கிழாரும், எத்தகைய பாடல் பாடலாம்? என்று கம்பனும் தம்மைத்தாமே கேட்டுக் கொண்டார்கள் என்று கூறலாம். சேக்கிழார் தாம் கூறவந்த வரலாறுகளுக்குக் கவிதையை-காப்பியத்தை-ஒரு கருவி யாகக் கொண்டார். ஆனால், கம்பன்தான் இயற்றப்போகும் பெருங்காப்பியத்திற்கு இராமன் கதையைக் கருவியாகக் கொண்டான். இவ்வாறு இருவர் குறிக்கோள்களும் முற்றும் வேறுபட்டிருப்பதை முதலில் அறிந்துகொள்ள வேண்டும். இத்தகைய அடிப்படையில் தொடங்கிய சேக்கிழாருக்குக் காப்பியம் சிறந்த கருவியா என்பதை ஆராயவேண்டும். அவருடைய புலமையை நோக்க, இராமன் கதை போன்ற வேறு ஒரு கதையை அவர் பாட எடுத்துக் கொண்டிருந்தால் இதனைவிடச் சிறந்த ஒரு காப்பியம் தமிழ்மொழிக்குக் கிடைத்திருக்கும் என்பது உறுதி. ஆனால், அத்தகைய கதையில் சேக்கிழார் மனம் இவ்வளவு ஒன்றித் திளைத் திருக்குமா என்பது ஐயத்திற்கு இடமானதே. சுவர்க்க நீக்கக் கதை காப்பியம் செய்வதற்குச் சிறந்தது அன்றாயினும், அதில் வரும் மனிதனின் வீழ்ச்சி மில்டன் மனத்தைக் கவர்ந்தது என்றும், அதனாலேயே அவன் அக்கதையை எடுத்துக்கொண்டான் என்றும் அந் நாட்டுத் திறனாய்வாளர் கருதுகின்றனர். சேக்கிழார் தி றத் தி லு ம் இக்கருத்துப் பொருத்தமானது. அவர் எடுத்துக்கொண்ட .ெ ப.ா ரு ள் காப்பியம் செ ய் ய வசதியளிக்காததுதான். தனியாக ஒருவருடைய வரலாற்றை விரித்துக் கூறு வ த ன் று பெரியபுராணம். பல வரலாறுகளின் தொகுதி அது அதிற் காணப்பெறும் எந்த ஒரு நாயனாருடைய கதையும் காப்பியத் திற்குரிய நீளம் உடையதன்று. பெருங்காப்பியத்திற்கு வேண்டிய பல்வேறு சுவைகளும் இவ் வரலாறுகளில் கிடைப்