பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

لإدم. அ. ச. ஞானசம்பந்தன் 43 பது அரிது. துண்டு துண்டாக உள்ள எல்லா வரலாறுகளும் பக்திச் சுவை ஒன்றையே கொண்டு மிளிர்கின்றன. பெருங் காப்பியம் சிறப்பதற்குரிய நிகழ்ச்சிகளுங்கூட இதன்கண் இல்லை. வருணனைகள் செய்வதற்குக்கூட ஒரு நாடு, நகரம் இல்லை என்றாலும், இவந்றால் எல்லாம் மனம் தளர்வுறாமல் சேக்கிழார் ஒரு காப்பியத்தைச் செய்துவிட்டார். வடமொழிச் சார்புடைய காப்பியம் அவர் காலத்தில் பெருகத் தோன்றவில்லை. சிந்தாமணி ஒன்றுமட்டுமே அவருக்கு வழிகாட்டியாக இருந்தது. வடமொழி காப்பிய வழியை ஒரளவு மேற்கொண்டது சிந்தாமணி. அதனையே தமக்கு வழிகாட்டியாகக் கொண்டு தொடங்குகிறார் இப் புலவர் பெருந்தகை. காப்பியமுறைக்குச் சிந்தாமணி வழி காட்டினாலும் அந் நூலுக்கு உள்ள வாய்ப்பு இவருக்கு இல்லை. சீவகன் ஒருவனுடைய சரிதம் மட்டுமே கூறுவது சிந்தாமணி. அத்தகைய ஒரு சரிதத்தைச் சேக்கிழார் பாட மேற்கொள்ளவில்லை. பல சரிதங்களைக் கூறும் ஒன்றைக் காப்பியமாக ஒருவரும் அதுகாறும் செய்தறியார். பல சரிதங் களைக் கூறவேண்டிய அவசியம் ஏற்படின் அவை கிளைக் கதைகளாக அமைதல்வேண்டும். அக்கதைகளும் காப்பியத் தலைவன் வரலாற்றோடு ஏதோ ஒரு வகையில் தொடர்புடை யவனாக இருத்தல் வேண்டும். பெரியபுராணத்தில் உள்ள கதைகள் அத்தகையவனவல்ல; காப்பியத் தலைவரான சுந்தரர் வரலாற்றுடன், நேரடித் தொடர்போ மறைமுகத் தொடர்போ ஒன்றும் இவற்றிற்கு இல்லை. வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்தவர்களின் வரலாறுகள் அவை. என்றாலும், சேக்கிழார் மிக அழகாகத் தொடர்பு கற்பிக்கிறார். காப்பியமாகச் செய்யவேண்டும் என்ற கருத்துடனேயே அந்தத் தொடர்பை அமைக்கிறார். இன்றேல், நாடு, நகரம் முதலியவை பற்றிய வருணனையும் தேவை இல்லையே! வருணனைகள் கூறித்தான் ஆக வேண்டும் என்ற கட்டுப்பாடு ஒன்றும் அக் காலத்தில் இருந்த தாகத் தெரியவில்லை. முதலில் தோன்றிய சிந்தாமணியை