பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 47 மாகப் பாடாமல், ஏன் காப்பிய அமைதியை மேற்கொண்டார்? இவ்வினாக்களுக்கு விடை கண்டால் அவருடைய குறிக் கோளையும் காணலாம். சேக்கிழாருக்குப் பல நாட்களுக்கு முன்னரே பெரிய புராணத்தில் கூறப்பெற்ற நாயன்மார்கள் வாழ்ந்தார்கள். ஒவ்வொருவரும் ஒரு சிறந்த குறிக்கோளோடு வாழ்ந்தார்கள்; அக்குறிக்கோளுக்கு ஆபத்து வந்த காலத்தில் உயிரைவிட்டேனும் குறிக்கோளைக் காப்பாற்றினார்கள். இத்தகையவர்களுடைய சரிதங்கள் என்றும் மக்கட் சமுதாயத் திற்கு உறுதி பயப்பனவாகும். அவற்றைத் தக்க புலவன் ஒருவன் சிறந்த கவிதைகளால் புனைய வேண்டியது இன்றியமையாததாக இருந்தது. இவ்வின்றியமையாமை, பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மிகவும் வலுத்துவிட்டது. அக்காலம் இடைக் காலச் சோழர்களின் ஆட்சிக்காலம். கி.பி 985ல், முதலாம் இராசராசன் ஆட்சி தொட்ங்கி, சோழர் ஆட்சி என்றும் காணாத பெருமையுடன் இலங்கிற்று. அவன் மகனான இராசேந்திரன் காலத்தில் அப்பெருமை பின்னும் வலு வடைந்தது. அவனுக்குப் பின் வந்தவர்கள் பலர் அவனை ஒத்த பேரரசர்கள் அல்லராயினும் சோழ ஆட்சி நிலைகுலைய வில்லை. சாளுக்கிய, சோழ பரம்பரையினனான முதற் குலோத்துங்கன் கி.பி. 1070-ல் பட்டத்திற்கு வந்தான். பெரு வீரனாகிய அவன், ஒரளவு ஆட்டங்கண்ட பேரரசை மறு படியும் நிலைநாட்டிவிட்டான். இவன் பேரனாகிய இரண் டாம் குலோத்துங்கன் (1133-1150) காலமே சேக்கிழார் வாழ்ந்த காலமாகும். ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளாகத் தமிழ்நாடு முழுதும் ஒர் ஆட்சிக்கீழ் இருந்து வந்த காலம் அது. பல சமயங்களில் வேற்று நாடுகள் பலவும் (கங்கையும் கடாரமும்) தமிழர் ஆதிக்கத்தில் இருந்து வந்தன. - இவ்வரசர்கள் வெற்றிச் சிறப்பால் தமிழ்நாடு எல்லையற்ற செல்வத்திலும் செல்வாக்கிலும் மிதக்கலாயிற்று. முதலாம் எலிசபெத் காலத்தில் எவ்வாறு இங்கிலாந்து தேசம் தான் பெற்ற வெற்றிகளால் செல்வாக்கில் ஓங்கி நின்றதோ