பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 49 வேண்டியதில்லை. கம்பன் பாடிய காப்பியமே சிறந்த சான்று பகரும். இராமனுக்குத் திருமணம் என்று கேட்டுத் தசரதன் மிதிலைக்குப் புறப்படுகிறான். புறப்பட்டது பற்றியும் மிதிலை சென்று அடைந்தது பற்றியும் கூற எத்தனை பாடல்கள் தேவை? முந்நூற்றைம்பது பாடல்கள் பாடுகிறான், அக்காளமேகம், வரைக் காட்சி, உண்டாட்டு, பூக்கொய்தல், நீர் விளையாட்டு முதலிய பாடல்களில் செல்வர்களின் களியாட்டங்களைக் கூறுகிறான் கம்பநாடன். அவர்கள் அயோத்தி மக்கள் என்று நினைத்துவிட வேண்டா. தான் வாழ்ந்த காலத்தில் தமிழ் நாட்டு மக்கள் வாழ்ந்த வாழ்க்கையைத்தான் அங்கே படம் பிடித்துக் காட்டுகிறான். காலங்கடந்த கவிதை புனையவல்ல அக்கம்ப நாடன். அவற்றைப் படிக்கும்பொழுது கோல்ட் ஸ்மித், என்ற புலவன் கூறிய, பொருள் குவியுமிடத்தில் மக்கள் தேய்கின்றனர்? (Where waaith accumitates men dacay) Gréirp są-3uu நினைக்கு வருகிறது. சங்ககால மக்கள் வாழ்க்கைக்கும் இவ்விடைக்காலச் சோழர்கால மக்கள் வாழ்க்கைக்கும் கடலனைய வேற்றுமை உண்டு. இச் சோழர் கால மக்கள் வாழ்வில் செல்வம் நிரம்பி வழிந்தது உண்மைதான். ஆனால், தேனும் பாலும் பெருக் கெடுத்து ஓடியதே அவர்கள் வாழ்வில் புரையோடக் காரணமாயிற்று. வாழ்க்கையில் ஒரு குறிக்கோளுடன் வாழ்கின்ற வரையில் செல்வம் அவ்வாழ்வை வளப்படுத்தும் உறுதுணையாக இருக்கும். குறிக்கோள் உள்ளவரை எந்தச் செல்வம் வாழ்வை வளப்படுத்தப் பயன்பட்டதோ அதே செல்வம் குறிக்கோள் அற்ற வாழ்வை அழிக்கும் கருவியாக அமைந்துவிடுகிறது. அறிவுடையவன் கையில் கிடைத்த கூரிய கத்தி பழம் நறுக்கப் பயன்படும். ஆனால், அறிவில் லாதவன் கையில் கிடைத்த அதே கத்தி அவனுக்கும் பிறருக்கும் தீங்கையே விளைவிக்கும். இடைக் காலச் சோழர் கால மக்கள் குறிக்கோள் அற்ற வாழ்வில் இன்பவேட்டை தே.-4 -