பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 தேசீய இலக்கியம் யில் இறங்கிய காரணத்தால் அவர்கள் வாழ்வை அழிக்கும் கருவியாகி விட்டது. தமிழ் இனத்தைப் பற்றிய இந்நோயை ஒரு சிலர் நன்கு அறிந்தனர். நோயைப் போக்க முற்பட்டனர். எத்துணை வெற்றிகள் பெற்றுத்தான் பயன் என்ன? வெற்றி களின் பயனாக வாழ்க்கைத் தரம் உயரலாம். ஆனால், வாழ்வில் ஒரு குறிக்கோள் இல்லையானால் அமைதி எங் கிருந்து கிட்டும்? அமைதியற்ற வாழ்க்கை விலங்கு வாழ்க்கை யன்றோ? மனிதனாகப் பிறந்ததன் மாட்சியை மறந்து விட்டால் யாது பயன்: 'அரிது அரிது மானிடராகப் பிறத்தல் அரிது’ என்று பாடி விட்டால் மட்டும் போதுமா? தமிழினம் முழுவதையும் பற்றிக்கொண்ட இந்நோயைக் கண்ட பெரியோர்கள் சிலர் இதற்கு ஏதாவது ஒரு மாற்றுத் தேட வேண்டுமே என்று நினைத்தனர். பன்னிரண்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டைப் பற்றி யிருந்த நோய் அச்சமுதாயம் முழுவதற்குமே தீமை விளை விக்கக் கூடியதாக இருந்தது. மனிதனுடைய் வாழ்ககையை விலங்கு வாழ்க்கையிலிருந்து வேறு பிரித்துக் காட்டக்கூடிய இயல்பு யாது? பசி, தாகம் முதலியன. மனிதன், விலங்கு என்ற இரண்டு இனங்கட்கும் பொதுவாகும். பிறந்துவிட்ட காரணத்தால் வாழ்ந்து, இறப்பு வரும்பொழுது இறததலும் இரண்டு இனங்கட்கும் ஒன்றுதான். அவ்வாறாயின் மனி தனுக்குத் தனிச் சிறப்பு யாது? அதனைத்தான் குறிக்கோள் (ideal) என்று பெரியோர்கள் குறித்தார்கள். குறிககோள் இல்லாத வாழ்க்கை விலங்கு வாழ்க்கையேயாம். திருநாவுக் கரசர் என்ற பெரியார் குறிக்கோள் இலாது கெட்டேன்: என்று வருந்துகிறார். குறிககோள் இன்றியமையாதது என்று கண்டபின் அது யாது என்ற வினாத் தோன்றுமன்றோ? ஒவ்வொரு மனிதனும் எடுத்த இப்பிறப்புத் தீருமுன் செய்து தீர வேண்டிய கடமைகள் பலவுள. கடமைகளுள்