பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞான்சம்பந்தன் 51 சில சுயநலத்திற்காகவும் இருத்தல் கூடும். ஒரு தொழிலில் ஈடுபட்டவன் காலையில் பத்து மணிக்குத் தொழிலகம் செல்வது ஒரு கடமையாகும். இக்கடமையை ஏன் அவன் நிறைவேற்று கிறான்? மாத முடிவில் கிடைக்கும் ஊதியத்தைக் கருதித் தானே? எனவே, இதுவும் ஒரு கடமை எனினும் இக்கடமை யைப் பெரியதென்று யாரும் கூறுவதில்லை. ஒரு தாய், தான் பெற்ற குழந்தைக்குப் பாலூட்டி வளர்க்கிறாள். இதுவும் கடமைதான். ஆனால், முன்னர்க் கூறிய கடம்ை போன்றது அன்று இக்கடமை. மாத முடிவில் தாய்க்குக் கிடைக்கும் பரிசில் அல்லது ஊதியம் ஒன்றும் இல்லை. கடமைகளுள் இதனை ஒருபடி உயர்ந்ததாகவும் கூறலாம். இந்த அளவில் ஒரு தாய் நின்று விட்டால் அவள் கடமையை நன்கு நிறை வேற்றியதாக மட்டுமே கூற முடியும் குழந்தையின் வயிற்றுப் பசியைத் தணிக்கும் அவள், அழும் குழந்தையை வீட்டில் விட்டு விட்டுப் படக்காட்சி பார்க்கச் செல்லும் தாயைவிடச் சிறந்தவள் என்பதில் ஐயமில்லை. ஆனாலும், இதனுடன் மட்டும் தாயின் கடமை முடிந்து விடுவதில்லை. தன் மகன் நாளை வருங்கால உலகில் ஒரு பெரிய மனிதனாக விளங்க வேண்டும் என்று அத்தாய் நினைத்து அதற்கு ஆவன செய்வாளேயானால், அவள் தலையான தாய் என்றே போற்றப்படுவாள். இவ்வாறு நினைத்து அதற்கு ஆவன் செய்தல் கடமை அன்று. ஆனால், அவ்வாறு செய்வதைத் தான் குறிக்கோள் என்று கூறுகின்றோம். ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் இருத்தல் வேண்டும். இந்தப் பிறவியை ஏன் எடுத்தோம்? இதில் செய்து முடிக்கவேண்டிய கடமைகள் யாவை? இப்பிறவி முடிந்த பிறகு என்ன ஆகப்போகிறோம்? என்ற வினாக்கள் ஒவ்வோர் ஆணும் பெண்ணும் தவறாமல் தன்னைத் தானே கேட்டுக் கொள்ளவேண்டிய கேள்விகள். இவற்றுள் இடை நின்ற கேள்விதான் இன்றியமையாதது. செய்து முடிக்கவேண்டிய கடமைகள் என்பதில் அவரவர்கள் எதை வேண்டுமானாலும் கூறிக்கொள்ளலாம். ஒரு மனிதன்