பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 63 செல்வத்தில் திளைத்திருந்த மக்கள், இன்ப வேட்டை ஒன்றையே வாழ்க்கையின் பொருளென மதித்து வாழத் தலைப்பட்டு விட்டனர். இந்த நிலைக்கு இறங்கிவிட்ட மக்களைக் கைதுக்கி விடவேண்டிய நிலையும் வந்து விட்டது. யார் இதனைச் செய்யமுடியும்? சிறந்த மருத்து வனுக்கு நோய் வெளிப்படுமுன்பே அதன் குறிகள் தெரிந்து விடும். அந்த நிலையில் ஒருவனைப் பார்த்து, "உனக்கு இத்தகைய நோய் வரும்போல் இருக்கிறது. உடலை நன்கு காத்துக்கொள் என்று கூறலாம். ஆனால், அவன் இவ் அறிவுரையைக் கேட்டுத் திருத்திக்கொள்வான் என்று உறுதி கூறமுடியாது. ஒருவேளை திருந்தவும்கூடும் என்ற பரந்த நோக்கில் சொல்லிப் பார்க்கலாம் என்று துணிந்து கூறுவதே நல்ல மருத்துவன் கடமை. சோழப் பேரரசில் பொறுப்பு வாய்ந்த பதவியை வகித்த சேக்கிழார் பெருமானுக்குத் தமிழ் இனத்தைப் பிடித்த இந்த நோய் விரைவில் விளங்கிவிட்டது. இன்பவேட்டை ஆட வேண்டா என்று அவர் கூறியிருப்பார். ஆனால், ஒருவரும் அவருடைய அறிவுரையைக் கேட்டிருக்க மாட்டார்கள். பெருங்குடியனைச் சீர்த்திருத்த வேண்டுமானால் திடீரென்று அவன் பழக்கத்தை ஒழித்துவிட முடியாது அளவைக் குறைப்பதும், காப்பி, டீ போன்றவற்றை மாற்றாகப் பயன் படுத்துவதும் இன்றியமையாத வழிகளாகும். அதேபோலச் சேக்கிழாரும் தமிழ் இனத்திற்கு வந்துள்ள நோயைப் போக்க ஒரு மருந்து கொடுத்தார். அவர்கள் எந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் கவலை இல்லை; ஆனால், கூடவே கவனிக்கவேண்டிய இதனை மறந்துவிடாமல் இருந்தால் போதுமானது என்ற உண்மையை அவர் எடுத்துக் காட்டினார். குறிக்கோள் இல்லாத வாழ்க்கை பயனற்றது என்பதையும், மட்டமான குறிக்கோள் வாழ்க்கையில் நிலைத்த இன்பத்தைத் தராது என்பதையும எடுத்துக் கட்டவுே பெரிய புராணம் எழுதினார்,