பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 தேசீய இலக்கியம் பெரிய புராணத்தில் அறுபத்துமூன்று பேர்களுடைய வரலாறுகள் பேசப்படுகின்றன. இவர்கள் அனைவரும் ஒரு காலத்தில் வாழவில்லை; ஒர் இடத்திலும் வாழவில்லை; ஒரே வகையான தொழிலைச் செய்யவுமில்லை. அவ்வாறு இருக்க வும் இவர்கள் அனைவருடைய வரலாறுகளும் ஒரு நூலில் இடம்பெற வேண்டிய காரணம் யாது? பல்வேறு காலங்களில், பல்வேறு இடங்களில், பல்வேறு தொழில்களில் ஈடுபட்ட இவர்கள் அனைவர் வாழ்விலும் ஒரு பொதுத்தன்மை உண்டு. இப் பொதுத்தன்மை காரணமாகவே இவர்கள் அனைவரும் ஒரு பொதுப் பெயரால் அழைக்கப் பெற்றனர். அப் பொதுப் பெயர்தான் அடியார்கள்’ என்பது. அடியார்களாக ஆவதற்கு ஒன்றுதான் தேவை. அந்த ஒன்று இருந்துவிட்டால் வேறு எவை இருப்பினும் இல்லாவிடினும் கவலை இல்லை. தாம் பெற்ற ஒரு மகனை அரிந்து கறி சமைத்துப் போடுகிறார் ஒருவர். ஆனால், இருந்தவிடத்தில் இருந்துகொண்டே 'நம்பியாரூரர் என்ற பெயரை மட்டும் கூறிக்கொண்டிருக் கிறார் ஒருவர். இவர்கள் இருவரும் இறுதியில் பெறுவது ஒரே வீறுபேறுதான் இது எவ்வாறு முடிகிறது? பிள்ளையை அரிதலும், சும்மா நம்பியாரூரர் என்று கூறுதலும் சமமாகி விடுமா? ஆகாது என்றுதான் நாம் கூறுவோம். ஆனால். ஒன்றே என்று பெரிய புராணம் கூறுகிறது. இன்னும் கூறப் போனால், பிள்ளையை அரிந்ததைவிடப் பல சமயங்களில் "நம்பி ஆரூரர் என்று கூறுவது உயர்ந்ததாகிவிடலாம். அஃது எவ்வாறு என்று காண்டல் வேண்டும். இந்தச் சென்னை நகரில் அறுவை மருத்துவர் (Surgeons) பலருண்டு. பன்னூறு ரூபாய்களை வாங்கிக் கொண்டு அவர்கள் நம் அருமை உடம்பில் ஒரு பகுதியை வெட்டி விடுகின்றனர். கூர்மையான கத்தியால் நம்முடன் பிறந்துவளர்ந்த உடம்பின் ஒரு பகுதியை வெட்டி எடுப்பதற்கு அவர்கட்கு எவ்வளவு பணம்? நன்றியும் பாராட்டுகிறோம். ஆனால், அதே சமயத்தில் சிறு பேனாக் கத்தியால் ஒருவர் நம்முடம்பில் கீறிவிட்டால் அவருக்குக் கிடைக்கும் பயுன்