பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னுரை

“தொன்ற நிகழ்த்தது அனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினை” உடைய தமிழைத் தாய்மொழி யாகப் பேசும் மக்களைத் தமிழர்கள் என்று குறிப்பிடுகிறோம்: இந்திய உப-கண்டத்தின் தென் கோடியில் வடவேங்காம் தென் குமரி ஆயிடை யுள்ள நிலப்பரப்பில் வாழ்கின்றவர்கள் இவ் வினத்தார்.


எக்காலத்து எங்குத் தோன்றியவர்கள் இவர்கள்? வெளிநாட்டிலிருந்து இவண் வந்து குடியேறினவர்களா? அன்றி. இங்கேயே தொன்றுதொட்டு வாழ்ந்து வருகின்ற வர்களா? என்பது பற்றிய ஆராய்ச்சி இன்னும் முடித்த பாடில்லை. ஆனால், மொகஞ்சதாரோ, ஹரப்பா முதலிய இடங்களில் கிடைத்த புதைபொருள்கள், இப் பழந் தமிழ் மக்களின் பண்பாடு எங்கெல்லாங்கூடப் பரவியிருந்தது என்று ஒரளவு கூறுவதற்கு இடமளிப்பதாய் உள்ளது. மிகப்பழைய தமிழ் இலக்கியங்கள் கூடக் “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து வாளோடு முன் தோன்றிய மூத்த குடி” என்று சேர, சோழ, பாண்டியரைக் குறிப்பிட்டுச் செல்கின்றன. எனவே, சரித்திரம் தோன்றுவதற்குப் பல்லாயிரம் ஆண்டு