பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 - தேசீய இலக்கியம் இந்தப் பெரிய உண்மையை அறிவுறுத்தவே பெரிய புராணம் எழுந்தது. வாழ்க்கையில் ஒர் ஒப்பற்ற குறிக் கோளைக் கொண்டு வாழ்ந்து, அதனால் பிறப்பின் பயனைப் பெற்றவர்கள் வரலாற்றை நமக்குக் கூறுமுகமாகப் பெரிய புராணம் அத்தகைய வாழ்வை நாமும் மேற்கொள்ளத் தூண்டிற்று. எனவே, குறிக்கோளற்ற வாழ்வாகிய பெரு நோய் பிடித்த தமிழ்ச் சமுதாயத்திற்கு மருந்தாய் அமைந்தது பெரிய புராணம். இத்தகைய சூழ்நிலையில்தான் சேக்கிழார் தோன்று கிறார். இந்தப் பாழ்பட்ட சமுதாயத்தைக் கை தூக்கிவிட வேண்டும் என்று முடிவு செய்துகொள்கிறார். பெரியவர். தம் நோய் போல் பிறர் நோய் கண்டு உள்ளம் எரியின் இழுது ஆவர். அல்லரோ? இராசராசன் காலத்திலிருந்து கோயில்கள் பல்கிவிட்டன. அவற்றிற்கு அரசரும் பிறரும் நிபந்தங்கள் அமைப்பதும் மரபாகி விட்டது. மூவருக்குப் பிறகு மடங்கள் பல்கி விட்டன. ஆனால், பயன் தீங்காகவே முடிந்தது. அன்ன சத்திரங்கள் பல்கின; ஆனால், அவற்றில் துறவிகளும் அடியார்களும் உணவுகொள்ளவில்லை. சுருங்கக் கூறுமிடத்து வெறும் சடங்குகளும் வேடங்களும் மலிந்தன. உண்மைச் சமய வாழ்வு அருகி விட்டது. சமயத்தைப் பற்றிய நூல்கள் கற்கப் பெற்றன. எனினும், மக்கள் வாழ்க்கை கீழ்நோக்கிச் சென்று கொண்டே இருந்தது. பொருட் செல்வம் எல்லையற்று இருந்தது. திருவாரூர் மக்கள் வீடுகளைக் குறிக்குமிடத்துச் சேக்கிழார் 'பொன் துஞ்சு மாளிகை’ என்றல்லவா குறிக்கிறார்? இராச ராசன் தஞ்சைப் பெரிய கோயிலுக்கு விட்டுச்சென்ற நிலங் களையும், செய்து வைத்த ஆபரணங்கள், பொன் பாத்திரங் கள் என்பவற்றையும் இன்று கல்வெட்டில் கண்டாலும் துணுக்கம் ஏற்படும். அத்தகைய பொருட் செல்வம் தாண்டவமாடிற்று தமிழ் நாட்டில். ஆனால் மக்கள் மக்க ளான நிலைமாறி, மாக்களாகிக் கொண்டிருந்தார்கள். உண்டாட்டுப் படலம் முதலியவற்றை இராமாயணத்தில் ஒருமுறை படித்தால் அக் கால மக்கள் வாழ்க்கை நன்கு