பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 57 விளங்கும். இதற்கொரு மாற்றுத் தேட விரும்பிய சேக்கிழாருக்கு இப்பெரியார் சரிதங்களை விடச் சிறந்த ஒன்று எது? எத்துணை இன்னல்கள் நிறைந்திருப்பினும் இவற் றையே பாடித் தீர வேண்டும் என்ற குறிக்கோள் கொண்டார். இவற்றைப் பாட இலக்கிய உலகில் ஏன் காப்பிய அமைதியை மேற்கொள்ள வேண்டும் என்ற வினாவும் நியாயமானதே. சங்க கால இலக்கிய முறை எடுபடாத காலம் அது பத்தாம் நூற்றாண்டில் தோன்றிய சிந்தாமணி, மக்கள் மனத்தைக் கொள்ளைகொண்டு விட்டது. அங்ங்னம் கொள்ளை கொள்ள இரண்டு காரணங்கள் உண்டு. இன்ப வெறியில் மூழ்கியிருந்த மக்களுக்கு ஏற்பச் சிந்தாமணியும் சிற்றின்பச் சுவை மலிந்ததாக இருந்தது ஒன்று. அடுத்தது. அதன் பொருள்நயம் நிறைந்த பாடல், காப்பிய முறை முதலியன. எனவே, சேக்கிழார் சிந்தாமணியால் கவரப் பெற்ற மக்கள் மனத்தைத் தாமும் கவர வேண்டுமானால் அவரும் மேற் கூறிய இரு வழிகளைப் பற்றித்தான் ஆகவேண்டும். ஆனால், அவருடைய குறிக்கோளுக்கு முதற் காரணமாகிய சிற்றின்பச் சுவையைப் பாடுதல் இயலாத ஒன்று. ஆதலின், இரண்டாவது காரணத்தைச் சேக்கிழார் மேற்கொள்கிறார். காப்பிய உருவத்தில் தாம் கூறவேண்டி யதைக் கூற முற்படுகிறார். தம்முடைய பொருளுக்குக் காப்பிய முறை ஏற்றதன்று என்பதை நன்கு அறிந்திருந்தும், சேக்கிழார் அதனையே மேற்கொள்கிறார். மேற்கொள்வதோடு மட்டும் அன்று: அச்சரிதங்கள் எவ்வளவு இடந்தருமோ அந்த அளவுக்கு வெற்றியும் பெறுகிறார். இந்தக் காப்பியத்தைக் கற்கத் தொடங்குபவர்கள் இதில் எதனைப் பெரிதாக எதிர்பார்க்கவேண்டும் என்பதற்கு அறிகுறியாக, தொடக்கத்திலேயே திருமலைச் சிறப்பு என்ப வற்றை வைத்து விடுகிறார். இதனாலேயே படித்து இன்புற மட்டும் எழுதப்பெற்ற பொழுதுபோக்கு இலக்கியம் அன்று இது என்பதையும் குறிப்பாகப் பெற வைக்கிறார்.