பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 all; മരക്ഷ இனி, இப்பயனை அடைவதற்குரிய வழி என்று கூறப் பெறுவனவற்றுள் ஒருமை இருப்பதாகவே தெரியவில்லை. கால தேச வர்த்தமானங்களை ஒட்டி, அந்த வழி மிகவும் மாறுபடும். ஒரே இடத்தில் எல்லா வகையாலும் ஒத்த நிலையில் வாழ்கிறவர்கள் இடையேயுங்கூட ஒரே வழி மேற் கொள்ளப் பெறுவதில்லை. சமத்துவத்தை அடிப்படை வாழ்க்கையாகக் கொண்டு, சமத்துவத்தையே குறிக் கோளாகவும் கொண்டு வாழ்வதாகக் கூறிக்கொள்ளும் ருஷிய நாட்டில்கூட வழியில் ஒற்றுமை இருப்பதாகத் தெரியவில்லை. இருப்பதானால் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நூற்றுக் கணக்கானவர்களைத் தேச நங்ை கருதி’க் காணாமற்போகச் செய்யவேண்டிய அவசியம் என்ன? எனவே, அவரவர்கள் கூறும் வழிகளில்கூட வேறுபாடுகள் இருக்கத்தான் இருக் கின்றன. இந்த உலகில், நாம் கண்ணெதிரே காணக் கூடிய பயன்களை அடையச் செய்யும் முயற்சியிலேகூட இவ்வளவு வேற்றுமைகள் இருக்கின்றனவே பொருளாதாரச் சமத்து வமே மக்கள் மனநோய் தீர்க்கும் மருந்து என்று கூறுகிறவர் முதல் கட்டுப்பாடு அற்ற அரசியலே எல்லாவற்றிற்கும் மருந்து என்று கூறுகிறவர் (Anarchists) வரையில் பல திறப் பட்ட கருத்து வேறுபாடு உடையவர்களைக் காண்கிறோம். இவைகள் அனைத்துமோ, அன்றிச் சிலவோ நடைமுறையில் உள்ள நாடுகள் சில உண்டு. ஆனால், இவற்றை நடை முறைக்குக் கொணர்ந்த பிறகாவது அவை அமைதியை அடைந்துவிட்டனவா என்றால் அதுதான் இல்லை! ஏன்? அமைதி என்ற ஒன்றை நாடித்தானே இவ்வளவு முயற்சி களையும் செய்தார்கள்? வழி கண்ட பிறகு அந்த வழியிற் சென்ற அவர்கள் நினைத்த பயனை ஏன் அடையவில்லை? அவர்கள் நினைத்த பயன் சரியானதுதான். ஆனால், அந்தப் பயனை அடைய மேற்கொண்ட வழி சரியானதன்று என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது. அவரவர்கள் தத்தம் வழியே சிறந்தது என்று வாய் கிழியக் கத்தினதால் மட்டும் புயுன் இல்லை. வழி சிறந்ததா இல்லையா என்பதை விவு