பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 தேசீய இலக்கியம் பெறாதன விரும்பும் உயிர்கள் என்று கூறினான். மிகவும் பாடுபட்டு ஒரு பொருளைப் பெற்றாலும், பெற்றவுடன் அதில் உள்ள ஆர்வங் குறைந்துவிட, கிடைக்காத பிற பொருள்களை யும் உயிர்கள் விரும்பும் என்பதே இதன் பொருளாகும். இனி, அடுத்தபடியாக உள்ளவர்கள் அமைதியை அடுத்த உலகில் தேடுபவர்கள். இந்த உலகில் எவ்வாறு இருந்தாலும் சரி, ப்ோகிற உலகில் நன்கு அமைதியுடன் வாழவேண்டும் என்று நினைக்கிறார்கள் இவர்கள். அதற் குரிய வழிகள் சிலவற்றை வகுத்துள்ளார்கள். இன்பமும் துன்பமும் வண்டிச் சக்கரம் போல வருபவை என்ற சட்டத் தைக் கொஞ்சம் அதிகப்படியாக நம்பி வாழ்க்கையைக் கொண்டு செலுத்துபவர்கள். இந்த உலகில் துன்பத்தை அனுபவித்தால்தான் இதன் முடிவில் இன்பம் கிடைக்கும். இங்கு இன்பமானால், முடிவு துன்பமாகத்தானே இருக்கும்? வாழ்க்கை என்பது உலகிற்கு ஆன்மாவைக் கொண்டு செலுத்தற்குரிய சாதனம். எனவே, முடிவை நன்கு பெற வேண்டுமானால் வாழ்க்கையாகிய வழியைப்பற்றிக் கவலை கொள்ளவேண்டா. இவ்வாறு நினைக்கும் இக் கூட்டத்தார் உலகின் பல பகுதிகளிலும் பல சமயக் கோட்பாடுகளிலும் உளர். இக் கொள்கையில் சிலர் இன்னும் ஒரு படி மேலே சென்று துன்பத்தைத் தேடிப் பிடித்து அனுபவிப்பதே இவ் வுலக வாழ்க்கையில் செய்யவேண்டிய கடமை என்று கருது கிறார்கள். பொறி புலன்களை அடக்கி ஆள்வதற்கும் மனத்தை ஒருநிலைப்படுத்தற்கும் ஏற்ற வழி துன்பங் களைத் தேடிப் பிடித்து அனுபவிப்பதே என்று கருது கின்றனர். துன்பங்களையும் வலியையும் பொறுத்துக் கொள்வதில் ஒரளவு புலனடக்கம் அமைவது மெய்தான். ஆனால் இவை அளவுக்கு மிஞ்சியவிடத்து, மனம் ஒரு நிலைப்படாமல் இதே கவலையில் ஆழ்ந்து விடுமாதலின் இவ்வழி மிக ஆபத்தானது. மேலும், வரப்போகிற உலகில் பெறப்போகும் இன்பத்திற்காக, இருக்கும் உலகில் துன்பத் ಜಿ. தேடி அனுபவித்தல் பொருத்தமா என்பதும் ஆராய்ச்சிக் . • التي لللاتي