பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 68 இவ்விாண்டு வழிகளிலும் அப்பாற்பட்ட மூன்றாவது வழியே ஈண்டும் மறு உலகத்தும் அமைதி நாடும் வழியாகும். இந் நாட்டில் தோன்றிய சைவம், வைணவம் என்ற இரு பெருஞ்சமயங்களும் இவ்வழியையே மேற்கொண்டன. துன்பத்தை விரும்பி இவ்வுலகில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கொள்கையை இவை ஆதரிப்பதில்லை. இன்பம் துன்பம் இரண்டையும் ஆக்கியவன் ஒருவனே ஆகலின், அவற்றுள் ஒன்றை ஏற்று மற்றொன்றை வெறுத்து ஒதுக்க வேண்டிய கட்டுப்பாடு இல்லை. மேலும், உலகமும் அதிலுள்ள தனு 'கரண புவன போகம் என்று கூறப்பெறும் அனுபவப் பொருள்களும் இறைவனாலேயே படைக்க பெற்றவையாதலின், இவற்றை அனுபவிக்கக் கூடாது என்பது அவன் கருத்தாக இருத்தற்கில்லை. எனவே, இன்பம் துன்பம் என்ற இரண்டையும் அனுபவிப்பதுடன், அவற்றில் மனம் அழுந்தி விடாமல் இருப்பதே இங்கும் அங்கும் அமைதி தேடும் வழியாகும். இந்தப் பற்றற்ற நிலையையே இந் நாட்டார் பெரிதும் போற்றினர். மெய்த்திரு வந்துற்றாலும், வெந்துயர் வந்துற்றாலும் ஒத்திருக்கும் உள்ளத்துறவையே: இவர்கள் பெரிதும் போற்றினர். பற்றற்ற இந்நிலையே சிறந்ததெனப் பல சமயங்களும் கூறலாயின. பற்றற்ற நிலை என்று கூறினவுடன் சிலருக்கு ஒரு வகை யான ஐயம் ஏற்படலாம். பற்று அறுதல் என்றால் அது ஒரு கொள்கையாகவோ தத்துவமாகமோ இருத்தல்கூடுமா? இருக்கின்ற ஒன்றை அற்றுப் போகச் செய்தல் எதிர்மறையே (negative) 361s, உருப்படியான கொள்கையாகுமா என நினைக்கலாம். ஆனால், பெயரளவில் பற்றறுதல் எதிர்மறை தான். பற்றற்ற நிலைக்குப் பயிற்சி பெறுதல் என்பது எல்லா வகையான நற்பண்புகளையும் வளர்க்கும் முகமாகவே முடியும். ஆசை. வெகுளி, பற்றுள்ளம், ஆணவம் முதலிய தவறான பெருந் தீங்குகளிலிருந்து விடுபட்ட பின்னரே இந்த நிலை கிடைக்கிறது.