பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 தேசீய இலக்கியம் இந்த நிலை சிறந்த பயனை அளிக்கக்கூடியது என்பதை உலகிடைத் தோன்றிய எல்லாச் சமயங்களும் கூறின. கீதை கூறும் நிஷ்காமிய கருமம் இதுவே புத்த சமயத்தின் கொள்கை இதுவே, சீனதேசத்தைச் சேர்ந்த லோட்சூ" (l.ao Tsu) என்பாரும் இதை வற்புறுத்தினார். உலகப் பொருள்களில் பற்று அற்றுக் கடவுள்மேல் பற்று வைக்க வேண்டும் என்பதே இயேசு சமயத்தின் தீர்ந்த கொள்கை. இத் தமிழ்நாட்டிலும் அற்றது பற்றெனில் உற்றது வீடு' (பிரபந்தம், 26 0) என்றும், பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு (குறள், 330) என்றும், "ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள், ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்' (திருமந்திரம், 2612) என்றும் கூறும் வாக்குகள் நிரம்ப உள்ளன. பற்று அறுதல் என்ற பயனை அடைதல்வேண்டும் என்ற கொள்கையில் மிகுந்த ஒற்றுமை இருப்பதைக் கண்டோம். ஆனால், இந்தப் பயனை அடைவதற்குரிய வழிகள் வகுப் பதில் எண்ணற்ற கருத்து வேற்றுமைகள் உள்ளன. மனித மணம் விந்தைகள் நிறைந்தது. அது பற்றுக்கொள்வதற்கு உரிய பொருள் இன்னதுதான் என்று அறுதியிட்டுக் கூற இயலாது. மனம் பற்றுவதற்கு இன்ன இயல்புகள் அப் பொருளில் இருக்கவேண்டும் என்றும் கூறுதல் இயலாது இவ்வியல்புகள் பொருள்களில் நிறைந்துள்ளன என்றால் எல்லாப் பொருள்களிடத்தும் எல்லாருக்கும் பற்று இருத்தல் வேண்டும். அவ்வாறு இருப்பதில்லை. ஒருவர் முழுமனத் தோடும் பற்றுக்கொண்டுள்ள ஒரு பொருளை, மற்றொருவர் முழு மனத்தோடும் வெறுப்பதையும் நாம் காண்கிறோம். எனவே, மனம் பற்றுக்கொள்வதற்குரிய இயல்பு பொருளில் இல்லை என்பது தெளிவு. பின்னர் அது ஒரே இடத்தில்தான் இருத்தல்கூடும். அவ்விடந்தான் மனம் என்பது. மனமே பற்றுக்கு இருப்பிடம் மனங்கள் வேறு படுவதுபோல அவை பற்றுக்கொள்வதும் வேறுபடும். ஒரு மனம் பற்றுக்கொண்ட பொருளிலேயே மற்றொரு மணமும்