பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

களுக்கு முன்னரே தமிழர் நாகரிகமும் மிகச் சீரிய முறையில் வளம்பெற்று விளங்கிற்று என்று நினைய வேண்டியுள்ளது. மிகப் பழையதும் செறிவுடையதுமான தொல்காப்பியம்' போன்ற ஓர் இலக்கணம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னத் தோன்ற வேண்டுமானால், அதற்கு முன்னாப் பல்லாயிரம் ஆண்டுகளாக இம்மொழி சிறந்த இலக்கியங் களைப் பெற்றுத் திகழ்ந்திருத்தல் வேண்டுமென்று நினைப் பதில் தவறு ஒன்றுமில்லை. ‘பிளினி’ போன்றவர்கள் தம்முடைய குறிப்புகளில் வாண்டி நாடு, அதனை ஆட்சி செய்த பெண் அரசியார் அம் நாட்டில் கிடைத்த அளப்பருஞ் செல்வம் ஆகியவற்றைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர் என்றால, தமிழ் இனத்தின் பெருமை வெறும் ஏட்டளவில் இல்லாமல் மெய்யாகவே பிறர் கண்டு வியக்கும் வண்ணம் விளங்கிற்று என்று நினைக்கலாம்.

இத்தகைய ஒரு நாகரிகம் இத்தனை ஆயிரம் ஆண்டு களாக இந் நாட்டில் இடையீடு இல்லாமல், நிலைபெற்று வந்துள்ளது என்பதும் அறிந்து வியத்தற்குரியது. உலகின் பிறபகுதிகளில் காணப்பட்ட கிரேக்க, ரோமானிய, எகிப்திய, மெசப்பட்டோமிய நாகரிகங்கள் இன்று "பொய்யாய்க் கணவாய்ப் பழங்கதையாய் மெல்லப் போய். விட்டன. எத்தனையோ புயற் காற்றுகள், சூறாவளிகள் அடித்துங் கூட இத் தமிழ் நாகரிகம் இன்றும் வாழ்ந்து வளர்த்து வருகின்றது என்றால், இதனுடைய ஆணிவேர் "மிகவலுவானதாக இருத்தல் வேண்டுமென்பதில் எள்ளளவும் ஐயமில்லை. பிளேட்டோவும் அரிஸ்டாட்டிலும் தோன்றி வளர்த்த நாகரிகங்கள் இன்று மறைந்துவிட்டன. ஆனால் இத் தமிழ் நாகரிகம் மட்டும் இன்றும் இருந்து வருகிறது