பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 71 யைப் பயன்படுத்தி ஒரு பயனை அடைய முயல்கிறார்கள். அப்பயன் மிகச் சாதாரணமான இவ்வுலகியல் பொருளாகவும் இருக்கலாம்; பெரும்பான்மையினர் இத்தகைய பயனையே விரும்புகின்றனர். சிலரே உலகியற் பொருளின் நிலையா ம்ைய்ை அறிந்து அழியாத விட்டின்பத்தைப் பெற முயல் கின்றனர். - வீடுபேற்றை விரும்புவதில் தவறு ஒன்றும் இல்லை. உயிர் களின் இறுதி இலட்சியம் அதுதான் என்பதிலும் ஐயம் ஒன்றும் இல்லை. ஆனால், வீடுபேற்றைப்பற்றி நன்கு அறியாதவர்கள் மட்டும்ே அதனை விரும்புவதாகத் தெரிகிறது. நன்கு அறிந்தவர்கள் அதனையும் விரும்பவில்லை என்பது கண்கூடு. அதனை விரும்புகிறவர்கள் மனநிலை இதன் காரணத்தை நன்கு அறிவிக்கும். பிறவி என்றால் துன்பம் என்ற முடிவிற்கு வந்த இவர்கள். துன்பம் நிறைந்த இப்பிறவி யிலிருந்து விடுபட்டு வீடுபேற்றை அடையவேண்டும் என்று விரும்பினர். சிலர், இதற்கு மாறாகப் பிறவியைத் துன்பம் என்று நினையாமல் இருந்தனர், அம்மட்டோடு இல்லை: பிறவி வேண்டும் என்றுகூடக் கருதினர். இவர்கள் இவ்வாறு விரும்புவதற்குக் காரணம் பிறவியின் பயனைப் பெறும் வழியை இவர்கள் அறிந்திருந்தமையேயாகும். சிரங்கு பிடித்தவன் முதுகு சொறிவதற்குக் கத்தியைப் பயன்படுத்திவிட்டு அதனால் துன்பம் நேர்ந்தபொழுது கத்தியே தவறான படைப்பு என்று நோதல் பொருத்தமுடைய தன்றுதான். உடனே அவன் கத்தியை அப்பால் எறிந்து விடுகிறான் அல்லவா? அதேபோல, பிறவியின் பயனை நன்கு அறியாதார், இது வேண்டா என்று கூறுவதில் வியப்பொன்றும். இல்லை. துன்பத்தில் உழலும் இவர்கள், இதிலிருந்து விடுதலை அடையவேண்டும் என்று நினைப்பதும், அதற்கென இறைவனை வணங்குவதும் இயற்கையேயாகும். ஆனால், கத்தியின் பயனை அறிந்து பழங்களை நன்கு நறுக்கத் தெரிந்தவர்கள் கத்தியை வெறுப்பதும் இல்லை; அதனை