பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 தேசீய இலக்கியம் எறிந்துவிட முயல்வதும் இல்லை. இத்தகைய அடியார் களே தமிழ்நாட்டில் வாழ்ந்தார்கள். பிறவியின் பயனை அறிந்த இவர்கள் அதனை ஒதுக்காததோடு போற்றவுஞ் செய்தார்கள். வந்த பிறப்பதனை வணங்குவாம்’, மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே, மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதாம் இன்பம் என்பன போன்ற தொடர்களைப் பிறவியை வெறுப்பவர்கள் கூறியிருக்க முடியாதே? இங்ங்னம் இவர்கள் கூறக் காரணம் என்ன? இக்காரணத்தை ஆராய்ந்தால் தமிழ்நாட்டு அடியார் களின் உண்மைத்தன்மையை ஒருவாறு அறிய முடியும். முன்னர்க் கூறப் பெற்றபடி உலகில் எல்லாப் பொருளுக்கும் வழி என்றும் பயன் என்றும் இரண்டு உண்டு. பெரும் பாலானவர்கள் ஒரு பயனை அடையவேண்டியே ஒவ்வொரு வழியை மேற்கொள்வர். ஆனால், வழியும் பயனும் ஒன்றுதான் என்ற முடியில் சிலர் நின்றனர். இன்னுங் கூறப்போனால் பயன் அல்லது முடிவு என்பதைப்பற்றி இவர்கள் நினைக்கூட இல்லை. பயனை அடைந்த பிறகு என்ன என்ன கிடைக்கும் என்று பிறர் எதிர்பார்த்தனரோ அவை அனைத்தையும் இவர்கள் தாம் மேற்கொண்ட வழியிலேயே கண்டனர். எனவே, முடிவு அல்லது பயனை அடைந்து ஆக வேண்டியது ஒன்றும் இல்லை என்பதுதான் இத்தகையோர் கண்ட முடிவாகும். முடிவு என்பது வீடுபேறு என்றும், அதனை அடையும் வழி என்பது இறைவனைக் கும்பிடுதல் என்றும் பிறர் கண்டனர். ஆனால், இத்தமிழ் நாட்டில் ஒரு சிலர் 'கும்பிடுதல் ஆகிய வழியையே பயன் அல்லது முடிவு என்று கண்டனர்." - இத்தகைய தனிச் சிறப்புள்ள கொள்கை தமிழ்நாட்டில் முன்பும் இருந்ததென்றே கொள்ளக் கிடக்கின்றது. கடைச் சங்க நூல்களில் ஒன்றாகிய பரிபாடலில் கேசவனார் என்னும் புலவர் இயற்றிய செய்யுளில் (14) இது வருகின்றது. திருப் பரங்குன்றத்திலுள்ள செவ்வேளைப் பாராட்டி வேண்டும் முறையில் அமைந்தது அப்பாடல்,